lic ipo date: எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை மே மாதத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை மே மாதத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர ஆலோசனை

எல்ஐசி ஐபிஓ தொடர்பாக வங்கிகள், நிதி ஆலோசனையாளர்கள் ஆகியோருடன் ஆர்ஹெச்பி தொடர்பாக மத்திய அரசு பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்குகளை வெளியிடுவதற்கு முன்பா ஆர்ஹெச்பி ஆவணத்தை செபியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதற்குரிய ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது.ஆதலால் வரும் மே மாதத்தில் எல்ஐசி ஐபிஓவை மத்திய அரசு நடத்தும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ரூ.65 ஆயிரம் கோடி

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. 

இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான கடைசித் தேதியும் முடிந்துவிட்டது.

மே 12ம் தேதி

எல்ஐசி ஐபிஓ வெளியிட சந்தை ஒழுங்கமைப்புக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி மத்திய அரசுக்கு மே 12ம்தேதிவரைதான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்குள் பங்குகளை வெளியிட வேண்டும். ஆதலால், மே 12ம் தேதிக்குள் எல்ஐசி ஐபிஓ இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தயார்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சர்வதேச சூழல் இன்னும் சவாலாகவே இருந்து வருகிறது, உள்நாட்டிலும் பங்குச்சந்தை கடும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. இருப்பினும் ஐபிஓ காலக்கெடு முடிந்திவிடும் என்பதால், மே மாதத்தில் பங்கு விற்பனையை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது.

31 கோடி 

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் பங்குகளை 5 சதவீதம் அதாவது 31 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இந்த பங்கு விற்பனையில் பாலிசிதாரர்களுக்கும், எல்ஐசி ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் எல்ஐசியின் 100 சதவீதப் பங்குகள் அதாவது 632.49 கோடி பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி ஐபிஓ மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டால் அதன் சந்தை மதிப்பு ரிலையன்ஸ், டிசிஎஸ் நிறுவனத்தை மிஞ்சிவிடும். மே 12ம் தேதிக்குள் இருக்கும் அவகாசத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு ஐபிஓவை நடத்தலாம். இல்லாவிட்டால் அதன்பின் செபிடியிடம் மறுபடியும் அனுமதி கோரி விண்ணப்பித்து ஒப்புதல் அளித்தபின் ஐபிஓ நடக்கும்.