தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,715 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,604 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 36,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 888 ரூபாய் அதிகரித்து 37,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.40 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.