கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,591 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 296 ரூபாய் குறைந்து 36,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.20 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து 65,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.