Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18  குறைந்து ரூ. 4.737-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ. 4.737-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 50 பைசா உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,700 விற்பனை செய்யப்படுகிறது.