கார்ப்பரேட் இந்தியாவை ஆதிக்கம் செய்யும் தமிழகத்தின் 3 சகோதரர்கள்

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் தமிழரை அடையாளப்படுத்தினார். முற்போக்கு சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் நூற்றாண்டுகளுக்கு முன்பை விதைத்துச் சென்றதால்தான் தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது, தமிழிர்கள் தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறார்கள்.

Three brothers from TN dominate corporate India

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்று  நாமக்கல் கவிஞர் தமிழரை அடையாளப்படுத்தினார். 

முற்போக்கு சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் விதைத்துச் சென்றனர்.  இந்தியா மட்டுமல்லாமல் உலகின் முக்கிய நிறுவனங்களில்  தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள்.  கீழடி முதல் கலிஃபோர்னியாவரை தமிழர்களின் தடம் பதிக்காத இடமே இல்லை.

சர்வதேச நிறுவனங்களை பொறுத்தவரை தமிழர்களின் பெருமைகள், பங்களிப்பு விரிவடைந்து செல்கிறது.  பெப்சிகோ நிறுவனம், கூகுள் நிறுவனம் வரை தமிழர்கள் ஆதிக்கம் பரவியிருக்கிறது.

இந்தியாவில் எந்த நிறுவனத்துக்குச் சென்றாலும் அங்குதமிழர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது எனலாம். இந்திய கார்ப்பரேட்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் ஆதிக்கம் செய்து வருகிறார்கள்.

Three brothers from TN dominate corporate India

நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த என். சந்திரசேகரன்(டாடா குழுமத்தின் தலைவர்), அவரின் இளைய சகோதரர் என் கணபதி சுப்பிரமணியன்(டிசிஎஸ் சிஓஓ), சந்திரசேகரன் மூத்த சகோதரர் என். ஸ்ரீனிவாசன்(முருகப்பா குழுமம்) ஆகிய 3 சகோதரர்கள்தான் இந்திய கார்ப்பரேட்டில் முக்கியமானவர்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் பிறந்த இந்த 3 சகோதரர்களும் அந்த காலத்தில் பள்ளிக்குச்செல்ல போக்குவரத்து வசதியின்றி, தினசரி 3 கிலோமீட்டர் நடந்தே பள்ளி சென்று தமிழ்வழியில் படித்தார்கள் என்பது குறிப்பிட வேண்டியது.

டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 1987-ம் ஆண்டு சந்திரசேகரன் பணியில் சேர்ந்தார். படிக்கும் காலத்தில் சராசரி மாணவராக இருந்த சந்திரசேகரன் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்து 30 ஆண்டுகளில் வியக்கும் வகையில் பணியாற்றினார்.

Three brothers from TN dominate corporate India

டிசிஎஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு சாதனைகளைச் செய்த சந்திரசேகரன் 2016ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் சந்திரசேகரின் நிர்வாகத்திறமையைப் பார்த்து வியந்த, டாடா சன்ஸ் நிர்வாகக்குழுவினர், ஒருமனதாக 2-வதுமுறையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவராக நியமித்துள்ளனர். 

அடுத்ததாக சந்திரசேகரனின் மூத்த சகோதரர் கணபதி சுப்பிரமணியன். இவரும் டிசிஎஸ் குடும்பத்தோடு 34 ஆண்டுகள் இணைந்தே பணியாற்றி வருகிறார். தற்போது தலைமை இயக்குநர் அதிகாரியாகவும்,  டிசிஎஸ் நிறுவனத்தின் நிதித்தீர்வு குழுவின் தலைவராக சுப்பிரமணியம் இருந்து இருக்கிறார்.

Three brothers from TN dominate corporate India

சந்திரசேகரனுக்கு இளையவரான என். ஸ்ரீனிவாசன் ,கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இருந்து முருகப்பா குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக கார்ப்பரேட் பைனான்ஸ், சட்டம், பொதுநிர்வாகத்தில் பழுத்த அனுபவத்தை பெற்றுள்ளார். பதிவு பெற்ற கணக்குப்பதிவாளரான ஸ்ரீனிவாசன், இந்திய கம்பெனி செகரெட்ரீஸ் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios