this is last time for gst

கடைசி முறை கூடும் ஜிஎஸ்டி கவுன்சில்....! 

பரபரப்பான அரசியல் சூழலிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜி எஸ்டி சட்டத்தின் மீதான முக்கிய திருத்தங்கள் குறித்து, இடண்டு நாட்கள் நடக்கும் கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. சட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . அதற்கான அனைத்து வகையான முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பட்ஜெட் கூட்டத்தொடர்

வருகிற 9ஆம் தேதியன்று, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றிற்கான ஒப்புதலை பெற இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ஒரு வேளை ஜிஎஸ்டி குறித்த முக்கிய திருத்தங்கள் மற்றும், முக்கிய முடிவினை இன்றே எட்டப்பட்டால், இரண்டாவது நாளாக நாளை கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது .