Asianet News TamilAsianet News Tamil

Third-party Insurance Rates:டூவீலர், கார் வாங்கப் போறீங்களா! ஜூன் 1 முதல் மத்திய அரசின் அறிவிப்பு அமல்

Third-party Insurance Rates third party car bike insurance:  Government to hike third-party motor insurance premium from June 1கார் வாங்குவது மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்குவது இனி காஸ்ட்லியாகும். வரும் ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு வகையான வாகனங்களுக்கு தேர்டு பார்டி இன்சூரன்ஸ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்துகிறது.

Third party Insurance Rates : third party car bike insurance : Bad news for vehicle owners as third party premium to be hiked from Jun
Author
New Delhi, First Published May 27, 2022, 9:58 AM IST

கார் வாங்குவது மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்குவது இனி காஸ்ட்லியாகும். வரும் ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு வகையான வாகனங்களுக்கு தேர்டு பார்டி இன்சூரன்ஸ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்துகிறது.

கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் தேர்டு பார்டி கட்டணம் உயர்கிறது. பொதுவாக தேர்டு பார்டி இன்சூரன்ஸ் கட்டணத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்தான் உயர்த்தி அறிவிப்பு வெளியிடும். முதல்முறையாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

Third party Insurance Rates : third party car bike insurance : Bad news for vehicle owners as third party premium to be hiked from Jun

இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

பேட்டரியில்முழுமையாக இயங்கும் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், கல்வித்துறையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்டு பார்டி இன்சூரன்ஸ்

தேர்டு பார்டி இன்சூரன்ஸ் என்பது வாகனத்துக்கு எடுக்கும் காப்பீட்டைவிட இது முக்கியமாகும். வாகனக் காப்பீடு வாகனத்துக்கான சேதத்துக்கு மட்டுமே இழப்பீடு தரும், அந்த வாகனத்தால் விபத்தில் ஒருவருக்கு ஏற்படும் காயத்துக்கும், உயிரிழப்புக்கும் இழப்பீடு வராது. ஆதலால்தான் தேர்டு பார்டி இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாகிறது. வாகனக் காப்பீடு எடுப்பதைவிட தேர்டு பார்டி இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமாகும். 

Third party Insurance Rates : third party car bike insurance : Bad news for vehicle owners as third party premium to be hiked from Jun

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கார்களுக்கான ப்ரீமியம்

தனியார் கார்கள் 1000 சிசி வரை ஆண்டு ப்ரீமியம் தொகை ரூ22 அதிகரி்த்து ரூ.2,094 ஆக உயர்ந்துள்ளது. 1000 முதல் 1500 சிசி வரை வாகனங்களுக்கு ரூ.195 அதிகரி்த்து, ரூ.3,416 ஆகவும், 1550 சிசி திறனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு தேர்டு பார்டி இன்சூரன்ஸ் கட்டணம், ரூ.7,897 ஆக அதாவது வெறும் ரூ.7 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 75 சிசிக்கு குறைவான வாகனங்களுக்கு ப்ரீமியம் தொகை ரூ.538ஆகவும், 75 முதல் 150 சிசி திறனுடைய வாகனங்களுக்கு ப்ரீமியம் ரூ.714 ஆகவும், 150 முதல் 300 சிசிவரை ரூ.1,366 ஆகவும், 350 சிசிக்கு அதிகமான திறனுள்ள வாகனங்களுக்கு ரூ.2,804 கட்டணம் உயர்கிறது.

Third party Insurance Rates : third party car bike insurance : Bad news for vehicle owners as third party premium to be hiked from Jun

கனரக வாகனங்கள்

சரக்கு வாகனங்களில் 12டன்னுக்கு அதிகமாக 20 டன்னுக்குள் சுமை தூக்கும் இருக்கும் வாகனங்களுக்கு ப்ரீமியம் ரூ.33,414 லிருந்து ரூ.35,313 ஆக அதிகரிக்கிறது.
40 டன்னுக்கு மேல் இழுக்கும் கனரக வாகனங்களுக்கான ப்ரிமியம் முன்பு ரூ.41,561ஆக இருந்தது, இனிமேல் ரூ.44,242 ஆக அதிகரிக்கும்.

பேட்டரி கார்கள்

பேட்டரி வாகனங்களுக்கான அடிப்படை காப்பீடு ப்ரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கார்களுக்கு 30 கிலோவாட் வரை உள்ள வாகனங்களுக்கு ரூ.1,780 ஆகவும், 30 முதல் 65 கிலோவாட் உள்ள கார்களுக்கு ரூ.2,904 ஆகவும், புதிய கார்களுக்கு 65 கிலோவாட்களுக்கு அதிகமான கார்களுக்கு ரூ.6,712 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Third party Insurance Rates : third party car bike insurance : Bad news for vehicle owners as third party premium to be hiked from Jun

பேட்டரி டூவீலர்கள்

இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பிற பேட்டரி டூவீலர்களுக்கான காப்பீடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 3 கிலோவாட்டுக்கு கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.457 ப்ரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுளளது. 3 கிலோவாட் முதல் 7 கிலோவாட் வரை உள்ள வாகனங்களுக்கு ரூ.607ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 7 மதுல் 16 கிலோவாட் வரை உள்ள டூவீலர்களுக்கு ரூ.1,161 ஆகவும், உயர்திறனுடைய இரு சக்கர வாகனங்களுக்கு ஆண்டு ப்ரீமியம் ரூ.2,383 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்களுக்கு 15 சதவீதம் ப்ரீயமியத்தில் தள்ளுபடியும், மற்றும் ஹைபிரிட் வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 7 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான வாகனங்களுக்கு காப்பீடு 15 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios