5 லட்ச ரூபாயாக வருமான வரி விலக்கு உயர்த்தியதால் எப்படியெல்லாம் லாபம் தெரியுமா..? இப்படி ஒரு லாபமா ..?

ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாயாக இருந்ததை, 5 லட்ச ரூபாயாக வருமான வரி விலக்கு உயர்த்தியதால் எவ்வளவு பணம் நமக்கு மிச்சமாகும் என்பதை பார்க்கலாம். இதன் மூலம் 13 ரூபாய் வரை நம்மால் மிச்சப்படுத்தும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இரண்டரை லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வரி செலுத்த தேவை இல்லை. ஆனால்,மூன்று லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக கொண்டவர்கள் 2600 ரூபாய் செலுத்த வேண்டி இருந்ததது. ஆனால் இனி செலுத்த தேவை இல்லை.

இதேபோல், ஆண்டு வருமானம் நான்கரை லட்ச ரூபாய் வரை இருந்தவர்கள் -10,400  ரூபாயும், 5 லட்ச ரூபாய் வரை இருந்தவர்கள்- 13,000 ரூபாயும் வருமான வரியாக செலுத்த வேண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் தற்போது 5 லட்சம் வரை வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இதன் மூலம் மாத சம்பளம் பெரும் நபர்கள் 13 ஆயிரம் ருபாய் வரை மிச்சப்படுத்தும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.