கருப்பு பணம் ஒழிக்கும் பொருட்டு , கடந்த மாதம் 8 ஆம் தேதி , பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். அதை தொடர்ந்து பல நெருக்கடிகளால், மக்கள் கையில் இருந்த பணத்தை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்தனர்.
தற்போது வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
தற்போது வருட கடைசி நேரம் , மற்றும் புத்தாண்டு ,கிறிஸ்துமஸ் என பல பண்டிகை காலம் வர இருப்பதால், பல நிறுவனங்கள் கவர்சிகரமான சலுகைகள் அறிவித்தாலும், பேன் பிரிட்ஜ் கார் , இரு சக்கர வாகனம் , மொபைல் போன் போன்ற எதையும் வாங்க முடியாமல் பலர் அவதி பட்டு வருகின்றனர்.
இதனால், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சராசரியாக 46.7% சரிந்துள்ளது. இதுபோல் கார் பைக் விற்பனையும் சராசரியாக 62.8% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
