Asianet News TamilAsianet News Tamil

யாரை பிடிப்பது ? எப்படி  பிடிப்பது ...?  ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!

there is-no-enough-employee-in-income-tax-office
Author
First Published Dec 10, 2016, 6:22 PM IST


யாரை பிடிப்பது ? எப்படி  பிடிப்பது ...?  ஊழியர்கள் இல்லாமல் திணறுது வருமானவரித்துறை....!!!

கருப்பு  பணத்தை  ஒழிக்கும் பொருட்டு ,  பழைய  500  மற்றும் 1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என அறிவிக்கப்பட்ட  பின்பு,  பல  நெருக்கடிகளை  மக்கள்  தினம்  தினம் சந்தித்து வருகின்றனர்.

 இதன் தொடர்ச்சியாக ,  மக்கள் கையில்  இருந்த பணத்தை   எல்லாம்  வங்கி கணக்கில்   செலுத்தினர். அதுவும் கூட  ஒருவரின்  வங்கி கணக்கில்  இரண்டரை  லட்சத்திற்கு   மிகாமல் இருக்க  வேண்டும் என்றும்,  அதற்கு  மேல்  இருந்தால் ,  அதற்குண்டான  வரி  மற்றும்  கணக்கு  காட்ட  வேண்டும் என்பதால்,  பல  பண  முதலைகள் ,  பணம்  இல்லாத ஏழை மக்களின் வங்கி கணக்கை  குறி வைத்து, அதில் டெபாசிட்  செய்தும், ஒரு  சிலர்   கமிஷன்  வாங்கிகொண்டு,  கருப்புன் பணத்தை  வெள்ளையாக்கும்    முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

இதை எல்லாம்  அறிந்தும் ,  இது போன்ற செயல்களில்  ஈடுபடுபவர்கள்  மீது தக்க  நடவடிக்கை  எடுக்கவும், மேற்கொண்டு  விசாரணை  மேற்கொள்ளவும்  , போதுமான  ஊழியர்கள் வருமான  வரித்துறையில்  இல்லை  எனவும் , எனவே,  போதுமான ஊழியர்களை  நியமித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த   வேண்டும்  என , வருமான வரி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் வருமான வரித்துறை கெசட் அதிகாரிகள் சங்கம் இணைந்து  மத்திய  அரசுக்கு ( பிரதமர் ) கடிதம் எழுதப்பட்டுள்ளது .

வருமான வரித்துறையில்  தற்போது 30 - 35 % பணியிடங்கள்  காலியாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios