Petrol diesel price today june 15, 2022 :ஜூன் 15-ம் தேதி பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி 25வது நாளக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மே 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.9.50 பைசவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.7 வரியைக் குறைத்தது.
அது முதல் பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 பைசாவாகவும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்கப்படுகிறது. தொடரந்து -வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறது.
சென்னையில் இன்று(ஜூன்15ம் தேதி) காலை நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 பைசாவும், டீசல் லிட்டர் ரூ.94.24 பைசாவாகவும் விற்கப்படுகிறது.
இதற்கிடையே ரஷ்யா மீதான பொருளாதாரத்தடையை தீவிரப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடந்த இரு நாட்களாக விவாதித்தன. 2022ம் ஆண்டு முழுவதும் ரஷ்யாவிலிருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யத் தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி முதல்வரை தள்ளிவிட்ட பாதுகாவலர்... அடுத்து நடந்தது என்ன?
இதனால் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து. கச்சா எண்ணெய் விலை பேரல் 125 டாலருக்கு மேல் உயர்ந்தது. வரும் நாட்களிலும் இதே நிலை சர்வதேச சந்தையில் நீடித்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதால் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 தரும் திட்டம்... தமிழகத்தில் நாளை முதல் அமல்!!
