வங்கதேசத்தின் மிகப்பெரிய பணக்காரர்.. ஷேக் ஹசீனாவை விட 40 ஆயிரம் மடங்கு அதிக சொத்துக்கள்.. யார் இவர்?
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை விட 40 ஆயிரம் மடங்கு அதிக சொத்து வைத்திருக்கும் நபரை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நம் இந்திய நாட்டில் கோடீஸ்வரர்கள் என்ற பேச்சு வரும்போதெல்லாம் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி பெயர்கள்தான் முதலில் வரும். ஆனால், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் எத்தனை கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது தெரியுமா? வங்கதேசத்தில் நிலைமை மோசமாகி வருவதைக் கண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் வறுமை மற்றும் வேலையின்மை இருந்தபோதிலும், அங்கு பல பில்லியனர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த கோடீஸ்வரர்களின் நிகர மதிப்பும் வேகமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஷேக் ஹசீனாவை விட ஆயிரக்கணக்கான மடங்கு சொத்து மதிப்புள்ள வங்கதேசத்தின் மிகப் பெரிய பணக்காரரை பார்க்கலாம்.
வங்கதேசத்தின் கோடீஸ்வரர்கள் என்று பார்க்கும்போது சல்மான் எஃப் ரஹ்மான், தாரேக் ரஹ்மான் மற்றும் சஜீப் வசேத் ஜாய் ஆகியோரின் பெயர்கள் முன்னுக்கு வருகின்றது. இந்த கோடீஸ்வரர்கள் பங்களாதேஷில் அடிக்கடி செய்திகளில் இருப்பார்கள். நம் ஊர் அம்பானி, அதானி என்று கூட சொல்லலாம். இந்த கோடீஸ்வரர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை வைத்துள்ளனர். இருப்பினும், செல்வத்தின் அடிப்படையில் அவர்கள் இந்திய பில்லியனர்களை விட மிகவும் பின்தங்கி உள்ளனர். வங்கதேசத்தின் மிகப்பெரிய பணக்காரர் தாட்கோ (DATCO) குழுமத்தின் நிறுவனர் ஆவார். அவர் பெயர் மூசா பின் ஷம்ஷர். மூசா பின் ஒரு சர்வதேச ஆயுத வியாபாரி மற்றும் அதிகார தரகர் என்று கூறப்படுகிறது.
மூசாவின் சொத்து மதிப்பு ஆனது ஊடக அறிக்கைகளின்படி, இது 12 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.99,600 கோடி ஆகும். அதே சமயம் ஷேக் ஹசீனாவின் சொத்து மதிப்பு 2.48 கோடி மட்டுமே. இதன்படி ஹசீனாவை விட மூசா பின் ஷம்ஷர் 40 ஆயிரம் மடங்கு பணக்காரர். பங்களாதேஷின் கோடீஸ்வரர்களில் சல்மான் எஃப் ரஹ்மானின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசத்தின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான பெக்ஸிம்கோ குழுமத்தின் தலைவர் சல்மான் எஃப் ரஹ்மான். ரஹ்மானின் சொத்து மதிப்பு $2 பில்லியன் அதாவது சுமார் ரூ.16,600 கோடி. அடுத்ததாக அந்த பட்டியலில் தாரேக் ரஹ்மான் இருக்கிறார். அவர் யாரென்றால், முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகன் ஆவார்.
உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!
தாரேக் ரஹ்மானின் நிகர மதிப்பு சுமார் 1.7 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.14,110 கோடி. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் மற்றும் பங்களாதேஷ் பிரதமரின் தற்போதைய ஐசிடி ஆலோசகர் ஆவார். அவர் ஐசிடி நிறுவனமான சினாப்ஸின் தலைவராகவும் உள்ளார். சஜீப்பின் நிகர மதிப்பு $1.5 பில்லியன் அதாவது சுமார் ரூ.12,450 கோடி. சையத் அபுல் ஹுசைன் பங்களாதேஷின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான அபெக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் எம்.டி. இது தவிர, பங்களாதேஷ் மருந்துத் தொழில் சங்கத்தின் (BAPI) தலைவராகவும் உள்ளார். ஹுசைனின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் அதாவது சுமார் ரூ.9,960 கோடி. பசுந்தரா குழுமத்தின் தலைவர் அகமது அக்பர் சோபன். இது பங்களாதேஷின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றாகும்.
ஷோபனின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 8300 கோடி ரூபாய். வங்காளதேசத்தின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான மேக்னா குழுமத்தின் முன்னாள் தலைவர் கியாசுதீன் மாமுன் ஆவார். கியாசுதீனின் நிகர மதிப்பு $420 மில்லியன் அதாவது சுமார் ரூ.3486 கோடி. டாக்டர் முஹியுதீன் கான் ஆலம்கிர் ஒரு வங்காளதேச பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். டாக்டர் முஹியுதீனின் நிகர மதிப்பு $400 மில்லியன் அதாவது சுமார் ரூ.3320 கோடி ஆகும். வங்கதேசம் என்ற நாடு ஏழை நாடு என்று ஒருபக்கம் சொன்னாலும், மற்றொரு பக்கம் பணக்கார நாடாகவே திகழ்கிறது.
ஆஃபர்களை வாரி வீசும் Amazon.. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் எவையெல்லாம் வாங்கலாம்?