தங்கம் விலை கடந்த சிலநாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது.  ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சிலநாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 8ரூபாயும், சவரணுக்கு 64 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,720க்கும், சவரண் ரூ.37,760க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் 4-வது நாளாக அதிகரித்துள்ளது. 

5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்: அதானி, ரிலையன்ஸ் உள்பட 4 நிறுவனங்கள் பங்கேற்பு

இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்து ரூ4,728ஆகவும், சவரணுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.37,824க்கும் விற்கப்படுகிறது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4728ஆக விற்கப்படுகிறது. 

தங்கதத்தின் விலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் சவரன் ரூ.38ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தங்கம் விலை, ரூ.36ஆயிரத்தை தொடும் அளவுக்கு குறைந்தது. தற்போது மீண்டும் சவரன் ரூ.38ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

மன்மதன், சர்ச்சை நாயகன் எலான் மஸ்க்: தெரி்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஆனால் கடந்த வாரத்தில் தொடர்ந்து இருநாட்கள் அதிகரித்து சவரனுக்கு ரூ.500க்கும் அதிகமாக அதிகரித்தது, இன்று 4வது நாளாக சவரனுக்கு ரூ.64 அதிகரித்து, சவரனுக்கு ரூ.780 வரை 6 நாட்களில் உயர்ந்துள்ளது.

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் ரூ.10 கோடி லாபம்: வியக்க வைத்த மகாராஷ்டிரா இளைஞர்கள்

அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மற்றும் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், வட்டி வீதம் 75 புள்ளிகள் வரை உயர்த்தை சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. 

இந்த அறிவிப்பை எதிர்பார்த்துதான் சர்வதேச சந்தை, உலக நாடுகள் காத்திருக்கின்றன. பெடரல் வங்கியி்ன் வட்டிவீத உயர்வு, ஆசிய, ஐரோப்பியச் சந்தையிலும், தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா குறைந்து, ரூ.60.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.60,800க்கும் விற்கப்படுகிறது.