Asianet News TamilAsianet News Tamil

gold rate today: சரசரவென சரியும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.168 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாகக் இன்றும் சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.52 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

The price of gold has sharply decreased straight 4thday: check rate in chennai, kovai, vellore and trichy
Author
First Published Sep 15, 2022, 10:22 AM IST

தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாகக் இன்றும் சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.52 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.168 சரிந்துள்ளது.  

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,701 ஆகவும், சவரன், ரூ.37,608 ஆகவும் இருந்தது. 

The price of gold has sharply decreased straight 4thday: check rate in chennai, kovai, vellore and trichy

தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை: பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார்

இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 21 குறைந்து ரூ.4,680ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.168 சரிந்து, ரூ.37,440ஆக குறைந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,680ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த வாரத்தில் தொடர்ந்து 4வதுநாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கும் மேல் குறைந்துள்ளது.

The price of gold has sharply decreased straight 4thday: check rate in chennai, kovai, vellore and trichy

புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத அறிவிப்பு தங்கத்தின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கக்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது..

அவ்வாறு வட்டிவீதம் அதிகரிக்கும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் முதலீட்டை எதிர்த்து டாலர் மீதுமுதலீடு செய்வது அதிகரிக்கும். இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெறும். தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

The price of gold has sharply decreased straight 4thday: check rate in chennai, kovai, vellore and trichy

குஜராத்தில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: ஒரு லட்சம் பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கான்-வேதாந்தா ஒப்பந்தம்

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து, ரூ.61.10ஆகவும், கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61,100 ஆகவும் உயர்ந்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios