Asianet News TamilAsianet News Tamil

today gold rate: பிச்சுகிட்டு போகுது! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம்?

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்து வருகிறது. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக் அளிக்கும் வகையில் இரு நாட்களில் சவரனுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

The cost of gold has significantly increased: check price in chennai, kovai, trichy and vellore
Author
First Published Oct 5, 2022, 10:34 AM IST

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்து வருகிறது. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக் அளிக்கும் வகையில் இரு நாட்களில் சவரனுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 60ரூபாயும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,775 ஆகவும், சவரன், ரூ.38,200 ஆகவும் இருந்தது. 

The cost of gold has significantly increased: check price in chennai, kovai, trichy and vellore

அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்

இந்நிலையில் புதன்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 60ரூபாய் அதிகரித்து, ரூ.4,835ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680ஆக ஏற்றம் கண்டுள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,835ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது. கடந்தசில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை. 

The cost of gold has significantly increased: check price in chennai, kovai, trichy and vellore

500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்

இந்நிலையில்  தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருக்கிறது.மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.  தங்கம் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது, நேற்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது இன்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. பல வாரங்களாக தங்கம் விலை ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 38ஆயிரத்துக்கு மேல் பயணித்து வருகிறது. 

The cost of gold has significantly increased: check price in chennai, kovai, trichy and vellore

சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெள்ளி விலையும் லேசாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, ரூ.67.00ஆகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து ரூ.67000 ஆகவும் விற்கப்படுகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios