Asianet News TamilAsianet News Tamil

gold rate today: தங்கம் விலை உயர்வு! சவரன் மீண்டும் ரூ.37ஆயிரத்தை தொட்டது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.36ஆயிரத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் ரூ.37ஆயிரத்தை எட்டியுள்ளது.  

The cost of gold has abruptly soared: check rate in chennai, kovai, trichy and vellore
Author
First Published Sep 28, 2022, 10:11 AM IST

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.36ஆயிரத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் ரூ.37ஆயிரத்தை எட்டியுள்ளது.  

தங்கம் விலை இன்று கிராமுக்கு 15ரூபாயும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,610 ஆகவும், சவரன், ரூ.36,880 ஆகவும் இருந்தது. 

The cost of gold has abruptly soared: check rate in chennai, kovai, trichy and vellore

இந்நிலையில் புதன்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15ரூபாய் அதிகரித்து, ரூ.4,625ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 ஏற்றம் கண்டு, ரூ.37,000ஆக அதிகரித்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,625ஆக விற்கப்படுகிறது.

கெளதம் அதானிக்கு சரிவு! உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ்ன் அம்பானியும் பின்னடைவு

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்தே கடும் ஏற்ற இறக்கத்துடனே சென்று வருகிறது. இந்த வாரத்தில் திங்கள்கிழமை சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது. ஆனால், இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.  

The cost of gold has abruptly soared: check rate in chennai, kovai, trichy and vellore

தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் செல்கிறது. சவரனுக்கு ரூ.328 நேற்று வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகை வாங்குகிறார்கள். 

வாங்குக்கூடியவிலைதான்! ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை தெரியுமா?

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 70 காசு குறைந்து, ரூ.60.00ஆகவும், கிலோவுக்கு ரூ.700 சரிந்து, ரூ.60,000 ஆகவும் விற்கப்படுகிறது
 

Follow Us:
Download App:
  • android
  • ios