2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 400 வந்தே பாரத் ரயில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மின்சார சேமிப்புடன், பயண நேரத்தை மிச்சப்படுத்தும், அதிகவேகமான, எதிர்காலத் தலைமுறையினருக்கான ரயில் என்று வந்தே பாரத் ரயிலை நிர்மலா சீதாராமன் வர்ணித்தார்.


2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 400 வந்தே பாரத் ரயில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மின்சார சேமிப்புடன், பயண நேரத்தை மிச்சப்படுத்தும், அதிகவேகமான, எதிர்காலத் தலைமுறையினருக்கான ரயில் என்று வந்தே பாரத் ரயிலை நிர்மலா சீதாராமன் வர்ணித்தார்.

அந்த ரயில் குறித்தசில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வந்தே பாரத் ரயில் என்றால் என்ன?

வந்தே பாரத் ரயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயிலாகும். இந்திய ரயில்வேயின் எதிர்கால ரயில்கள் இதுபோன்றவையாகத்தான் இருக்கும். வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் ரயிலாக வந்தேபாரத் இருக்கும். ட்ரெயின்18 ரயில் வடிவமைக்கப்பட்டபோது, ரயில்வே ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடியதாகவும், சுய உந்துதுதல் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. அதன்அடிப்படையில்தான் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது.

வந்தே பாரத் எவ்வாறு இயங்குகிறது?

வந்தே பாரத் ரயில் என்பது செல்ப் ப்ரோபல் எஞ்சின்(self propelled) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் எஞ்சின் இருப்பதால் தாமாகவே உந்தித்தள்ளும். 

என்னென்ன வசதிகள் உள்ளன?

எதிர்காலத் தலைமுறையினருக்கான ரயில் வந்தே பாரத் என்பதால் அதிநவீன வசதிகள் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக வை-பையுடன் கூடியபொழுதுபோக்கு வசதி, ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் மையம், அதாவது ரயில் எந்த இடத்தில் செல்கிறது என்பதை துல்லியமாக அறியமுடியும். கண்காணிப்பு கேமிரா, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், விமானத்தில் இருப்பது போன்று பயோ-வேக்கும் கழிவறைகள் என பல்வேறு வசதிகள் உள்ளன. 

எங்கு தயாரி்க்கப்பட்டது?

வந்தேபாரத் ரயில் முதன்முதலில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப்பின் இந்த ரயில்ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்டுவரும் வந்தேபாரத் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் இருக்கிறது. 

எவ்வளவு வேகம், எத்தனை பேர் பயணிக்கலாம்?

வந்தேபாரத் ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது, 1,100 பயணிகள் வரை செல்ல முடியும். வழக்கமான ஸ்டீல் தகட்டில் செய்யப்படாமல், அலுமினியத்தால் பெட்டிகள் செய்யப்பட்டதால், அதிவேகமாகச் செல்ல முடியும். 

இதனால் பயணிகளுக்கு பயண நேரம் 25 முதல் 45 % குறைகிறது. அதிநவீன பிரேக் சிஸ்டம் இருப்பதால், பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றது. குறைவான மின்சக்தியை எடுத்துக்கொண்டு ரயில் இயங்கும் தன்மை கொண்டதால், எதிர்காலத்தில் மின்சக்தியை சேமிக்கும் வகையில் இருக்கும்.

எத்தனை வந்தே பாரத் ரயில்கள் இயங்கப்படுகின்றன?

தற்போது 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி முதல் வாரணாசி வரையிலும், டெல்லி முதல் கத்ரா வரையிலும் இரு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்ற 44 வந்தேபாரத் ரயில்களை வடிவமைக்க ரூ.2ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் ஒப்பந்தப்புள்ளி மேக் இன் இந்தியா திட்டத்தில் இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ரயில் பெட்டிகள் தயாரிக்க 75% பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகவும், ரயிலின் மொத்த மதிப்பில் 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

யாருக்கு ஒப்பந்தம்
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ்ஸ் லிமிட் என்ற நிறுவனத்துக்கு 44 வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் 44 வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு, தயாரிப்பு அனைத்தையும் கையாள்கிறது.
வந்தே பாரத் ரயில் வடிவமைப்புக்காக 3 ரயில்வே செட்களை ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ஐசிஎப்பில் 24 செட்கள், கபூர்தலா,