துருவி தருவி கேள்வி கேட்க வரப்போகுது வருமான வரித்துறை.....!!!! பின்ன இப்படி டெபாசிட் பண்ணா அப்படிதான்.....!!!
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், நாடு முழுவதும் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது நாடு முழுவதும் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு ஆதார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில், மொத்தம் 25.58 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால், 5.98 கோடி வங்கிக் கணக்குகள் எவ்வித சேமிப்புத் தொகையும் இன்றி, வெறுமனே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், இதுவரை ரூ.64,252 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ.10,670 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்தப்படியாக, மேற்கு வங்கம் மாநிலத்தின் பங்களிப்பு ரூ.7,826 கோடியாகவும் உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தகவல் மட்டும் இல்லை. மிக விரைவில் வரி பிடித்தம் நடக்கும். அதே சமயத்தில், கருப்பு பணமா என்ற சந்தேகம் இருந்தால், விசாரணை கூட வரும்.......!!
.
