Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் லேண்ட்லைனா?: 1.30 கோடி பேர் இழப்பு; கையைப் பிசையும் செல்போன்சேவை நிறுவனங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக டாரிப் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தியதன் காரணமாக செல்போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் சரிந்துள்ளது. 

 

Telecom user base dips as operators hike tariffs
Author
new delhi, First Published Feb 21, 2022, 12:42 PM IST

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக டாரிப் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தியதன் காரணமாக செல்போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் சரிந்துள்ளது. 

செல்போன் பயன்படுத்துவதற்குப் பதிலாக கடைகளில் இருக்கும் லேண்ட்லைன் தொலைப்பேசி, போன் பூத்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Telecom user base dips as operators hike tariffs

கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் டாரிப் கட்டணத்தை 20 முதல் 30%வரை உயர்த்தின. இந்நிலையில் 2021, டிசம்பர் மாதத்துக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை குறித்து டிராய் வெளியிட்ட அறிக்கையில், பிஹார், ஜம்மு காஷ்மீர், டெல்லி, கேரளா தவிர்த்து பிற மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில், மொபைல்போன் பயன்பாட்டாளர்கள் 20 லட்சம் குறைந்துள்ளது. ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மும்பையில் 10 லட்சம்பேர் தங்கள் செல்போன் இணைப்பைக் கைவிட்டுள்ளனர். டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1.30 கோடி பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளனர் என்று டிராய் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏர்டெல், வோடஃபோன்ஐடியா நிறுவனங்கள் குறைந்தபட்ச டாரிப்பை ரூ.79லிருந்து ரூ.99ஆக உயர்த்தின. அதிகபட்ச கட்டணத்தை ரூ.2,399லிருந்து ரூ2,899ஆக உயர்த்தின. ஜியோ நிறுவனம் கடந்த 2016 செப்டம்பரில் தொங்கி டாரிப் போரில் மற்ற நிறுவனங்களுடன் ஈடுபட்டது. தொடக்கத்தில் 28 நாட்களுக்கு ரூ.75 ஆக இருந்ததை ரூ.91 ஆக உயர்த்தியது, அதிகபட்ச கட்டமத்தை ரூ.2,399லிருந்து ரூ.2,879ஆக உயர்த்திக்கொண்டது.

Telecom user base dips as operators hike tariffs

இதுகுறித்து தொலைத்தொடர்பு சேவை வல்லுநர்கள் கூறுகையில் “ 2ஜி செல்போன் வைத்திருக்கும் சாமானிய மக்களுக்கு சமீபத்திய டாரிப் ரூ.99 ஆக உயர்த்தியது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதத்துக்குள் 2வது முறையாக டாரிப் உயர்த்தப்பட்டுள்ளது, 30 முதல் 35 சதவீதம் கட்டண உயர்வுக்கு ஆளாகியுள்ளனர். 2ஜியிலிருந்தும், 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறிய வாடிக்கையாளர்களும் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தனர்

டெக்ஆர்க் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் பைசல் கவூசா கூறுகையில் “ டிசம்பர் மாதத்தில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் டாரிப் கட்டணம் உயர்வு பிரதானமானது. இந்த கட்டண உயர்வு 2-வது சிம்கார்டு பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வைத் தள்ளிவைத்துள்ளது. இதனால் பல செல்போன் எண்கள் ரீசார்ஜ் செய்யப்படாமலேயே இருக்கின்றன.

Telecom user base dips as operators hike tariffs

கோவிட் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் இது தொடர்கிறது. இந்த ஆண்டில் மீண்டும் கட்டண  உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய நிதிச்சிக்கலில் இருக்கின்றன, இழப்பைச் சந்தித்து வருகின்றன. அதேநேரம், சில ஆப்ரேட்டர்கள் 4ஜி நெட்வொர் சேவையை அறிமுகம் செய்கிறார்கள், ஸ்பெக்ட்ராமையும் வாங்குகிறார்கள்.

அதநேரம், கடன்தொகையும் அதிகரித்து வருகிறது. செலவுகளை ஈடுகட்ட போதுமான அளவு வருமானம் வரவில்லை எனத் தெரிந்தும்முதலீடு செய்கிறார்கள். ஆதலால் டாரிப்பை உயர்த்துவதான் செல்போன் சேவை நிறுவனங்களின் ஒரே வழி ” எனத் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios