crypto price: tds on crypto: TDS விதி,30% வரியால் பீதி: இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் 80% சரிந்தது

கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் டிடிஎஸ்(TDS), கிரிப்டோகரன்ஸி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி போன்ற புதிய கட்டுப்பாடுகளால் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் கடந்த 3 நாட்களில் 80 சதவீதம் சரிந்துள்ளது.

TDS rules drags down volumes on crypto sites

கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் டிடிஎஸ்(TDS), கிரிப்டோகரன்ஸி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி போன்ற புதிய கட்டுப்பாடுகளால் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் கடந்த 3 நாட்களில் 80 சதவீதம் சரிந்துள்ளது.

போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்

இந்தியாவில் செயல்படும் கிரிப்டோகரன்ஸி பரிமாற்ற நிறுவனங்களான ஜெப்பே(Zebpay), வாசிர்எக்ஸ், (wazirx), காயின்டிசிஎக்ஸ் (coinDCX) ஆகியவற்றின் வர்த்தகம் கடுமையாகச் சரிந்துள்ளது. அதாவது ஜெப்பே வர்த்தகம் வாசிர்எக்ஸ் , காயின்டிசிஎஸ்க் ஆகியவற்றின் வர்தத்கம் 67 சதவீதம் முதல்  87 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஜியோட்டஸ் பரிமாற்ற நிறுவனத்தின் வர்தத்கமும் 70ச தவீதம் சரிந்துள்ளது. 

TDS rules drags down volumes on crypto sites

சர்வதேச சந்தையில் ஏற்கெனவே பிட்காயின், டெரா உள்ளிட்ட கிரிப்டோ மதிப்பு சரிந்து வந்தது. இந்த சூழலில் மத்திய அரசு விதித்த ஒரு சதவீதம் டிடிஎஸ், மற்றும் கிரிப்டோ வருமானத்துக்கு 30 சதவீதம் வருமானவரி போன்றவை முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கின.

இதில் வாசிர்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் 82 சதவீதம் சரிந்துள்ளது, காயின்டிசிஎஸ் வர்த்தகம் 70%, ஜெப்பே வர்த்தகம் 76 சதவீதமும் குறைந்துள்ளது. 

விவோ செல்போன் நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு: 44 இடங்களில் அதிகாரிகள் சோதனை

இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் திடீரென குறைந்தது குறித்து பரிமாற்ற நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில் “ மத்திய அரசு சார்பில் கிரிப்டோ பரிமாற்றத்துக்கு எவ்வளவு டிடிஎஸ் பிடிக்கப்படும் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல் இன்னும் இல்லை. ஏற்கெனவே சர்வதேச நிலவரம் காரணமாக கிரிப்டோ கரன்ஸி மதிப்புகடுமையாக சரிந்தநிலையில் புதிய வரிவிதிப்பால் வர்த்தகம் மோசமாகச் சரிந்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

TDS rules drags down volumes on crypto sites

கிரிப்டோகரன்ஸியை பரிமாற்றம் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ ஒரு சதவீதம் டிடிஎஸ் என்ற விதியால் முதலீட்டாளர்கள் வெளியேறி வருகிறார்கள்” எனத் தெரிவிக்கின்றன.

கடந்த 202ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 6 முக்கிய கிரிப்டோபரிமாற்ற நிறுவனங்கள் மட்டும் 7000 முதல் 10000 கோடி டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. இதில் வாசிர்எக்ஸ் நிறுவனம் மட்டும்4300 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாக ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

கோடக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கிகளுக்கு கடும் அபராதம்: ஆர்பிஐ அதிரடி: என்ன காரணம்?

TDS rules drags down volumes on crypto sites

வாசிர்எக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜகோபால மேனன் கூறுகையில் “ இந்தியாவில் உள்ள அனைத்து கிரிப்டோ பரிமாற்றங்களிலும் கடுமையான சரிவுஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 70 முதல் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதற்கு பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம்.

கடந்த ஆண்டு சந்தையில் காளையின் ஆதிக்கம், முதலீட்டாளர்கள் அதிகமான ஆர்வத்தால் கிரிப்டோ வர்த்தகம் அதிகரி்த்தது. ஆனால், இந்த ஆண்டு கரடியின் பிடியில் சந்தை சிக்கியிருக்கிறது. கிரிப்டோவருமானத்துக்கு 30 சதவீதம் வரி, டிடிஎஸ் பிடித்தம் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி கிரிப்டோவை விற்கிறார்கள்”எனத் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios