sun pharma share :Share market today : Sun Pharma share price: :நாட்டின் மருந்துத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான சன் ஃபார்மாவின் பங்குகள் இன்று இந்திய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.
நாட்டின் மருந்துத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான சன் ஃபார்மாவின் பங்குகள் இன்று இந்திய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.
கடந்த 2021-22ம் ஆண்டின் கடைசி காலாண்டான 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-வது காலாண்டு முடிவுகளை சன் ஃபார்மா நிறுவனம் வெளியிட்டது. இதில் சன் ஃபார்மா நிறுவனத்துக்கு நிகர இழப்பு ரூ.2,277 கோடியாக இருந்தது.
இதனால் இன்றுகாலை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவும் முதலீட்டாளர்கள் சன் ஃபார்மா பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் வேகமாக சன் ஃபார்மா பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது.

பங்குச்சந்தையில் இன்று சன் ஃபார்மா நிறுவனத்தின் பங்குகள் 4.12 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை ரூ.851.50க்கு வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்கு்சசந்தையில் சன் ஃபார்மா பங்கு 4.17 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை ரூ.851.20க்கு சரிந்தது.
கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் நிகர லாபமாக ரூ.894 கோடி இருந்தது என்று சன் ஃபார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த விற்பனை ரூ.9,386 கோடிக்கு இருந்து. ஜனவரி மார்ச் காலாண்டில் சன் ஃபார்மா ஒட்டுமொத்த வருவாய் 9447 கோடியாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.7 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சரிவால் தேசியப் பங்குச்சந்தை நிப்டியி்ல் அதிகபட்ச இழப்பை சன் ஃபார்மா பங்குகள் சந்தித்தன.
சன் ஃபார்மா பங்குகள் குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் குறி்ப்பிடுகையில் “ சன் ஃபார்மா நிறுவனப் பங்குகள் இப்போது சரிந்திருந்தாலும், விரைவில் வலுவாக எழுப்பும் ஆதலால், சாதகமான கண்ணோட்டத்தோடு அனுக வேண்டும். இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை சன் ஃபார்மா வைத்துள்ளது. இந்த சரிவு சன் ஃபார்மா விற்பனையை, பெரிதாக பாதிக்காது” எனத் தெரிவித்துள்ளது.
