பிரதமர் மோடியின் 'விக்சித் பாரத்' கனவை நனவாக்கும் பட்ஜெட்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாராட்டு

தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மூலம் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமர்ந்துள்ளோம என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

Summary of how Modi Govt ushered in an era of Amrit Kaal: Minister Rajeev Chandrasekhar on Budget 2024 sgb

பிரதமர் மோடி வகுத்த தொலைநோக்குத் திட்டமான 'விக்சித் பாரத் 2047' என்ற கனவை நனவாக்குவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார். 58 நிமிடங்கள் நீட்டித இந்த உரையில் இந்தியா வரும் ஆண்டுகளில் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும் என்று குறிப்பிட்டார். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது என்றும் கூறினார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நிதியமைச்சர் நிதியமைச்சர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், மோடி அரசாங்கம் எவ்வாறு 'சப்கா சாத், சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ்' என்ற கொள்கையுடன் 'அமிர்த கால' சகாப்தத்தை உருவாக்கியது என்பதைச் சிறப்பாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு முழக்கம் மட்டுமல்ல, இந்தியாவையும் நமது பொருளாதாரத்தையும் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் மாற்றியமைத்த சித்தாந்தம்" என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பிடித்த அயோத்தி ராமர் கோயில்! நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

இது 2024 பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க மக்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மூலம் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமர்ந்துள்ளோம். 2014இல் பலவீனமான ஐந்து பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, இப்போது உலகின் சிறந்த 5 பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. மேலும் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும் இருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார்.

"பாரதத்தின் நான்கு தூண்களான பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், பிரதமர் மோடி வகுத்த தொலைநோக்குத் திட்டமான 'விக்சித் பாரத் 2047' என்ற கனவை நனவாக்குவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்" எனவும் பாராட்டி இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டு சாதனைகளைத் தொடர்ந்து வளர்ந்த இந்தியாவை உருவாக்கி, நம் நாட்டை மேலும் மாற்றியமைக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் திருப்புமுனையாக இருக்கும்: நிர்மலா சீதாராமன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios