பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கக் கோரினோம் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கக் கோரினோம் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
gst council meeting: ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயத்து்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பது ஒத்திவைப்பு?
சண்டிகர் நகரில் கடந்த 2 நாட்களாக 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்து. இந்தக் கூட்டத்தின் கடைசி நாளான இன்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு அடுத்துவரும் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஜிஎஸ்டி வரி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பீட்டுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதாவது 2022, ஜூன் மாதம்வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீடு தரும் எனக் கூறப்பட்டது.
அந்தவகையில் மத்திய அரசு இழப்பீடு தருவதாகக் கூறியக் காலக்கெடு இந்த ஜூன் மாதத்தோடு முடிகிறது. இதனால் ஜூலை மாதத்திலிருந்து மாநிலங்களுக்கு வரி இழப்பீடு மத்தியஅரசு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு: நிர்மலா சீதாராமனை நெருக்கும் எதிர்க்கட்சிகள்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க் கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எழுப்பி புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் எழுப்பப்ட்டது. அப்போது ஜிஎஸ்டி இழப்பீட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் “ ஜிஎஸ்டி இழப்பீடுவழங்குவதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை வைத்தோம். பாஜக ஆளும் மாநிலங்கள்கூட இதே கோரிக்கையை வைத்தனர். ஆனால் இழப்பீடு காலம் முடிய இரு நாட்கள் இருக்கும்போது மாற்று வழி கேட்டால் என்ன செய்வது” எனத் தெரிவித்தார்
புதுச்சேரி நிதிஅமைச்சர் கே.லட்சுமி நாராயணன் கூறுகையில் “ ஜூன் 30ம் தேதியுடன் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது முடிகிறது. ஆதலால், மேலும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அனைத்து மாநிலங்களும் கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். ஆனால், இழப்பீடு குறித்து மத்திய அரசு சார்பிலிருந்து எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
