star 2.0 plan started today by edapadi palanisamy today

தமிழக பத்திர பதிவு துறையில் பல முன்னேற்ற மாற்றங்கள் தொடர்ந்து அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக,ஸ்டார் 2.0 என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம்,பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் முன் ஆவணங்களை இணையத்தின் வழியாகவே சரிபார்க்கலாம்.

அதே போன்று இணையத்தின் வழியாவே,பத்திர பதிவு செய்வதற்கு விண்ணபிக்கலாம்.

பத்திரபதிவின் போது,மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு,முன்னாள் உரிமையாளர்களுக்குசெய்தி அனுப்பும் வசதி

கை ரேகையை ஒப்பிட்டு பார்க்கும் வசதி

கட்டணமில்லா தொலைபேசி வழி பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதி,

பட்டா மாறுதல் வசதி

இணையவழி கட்டணமில்லா வில்லங்கச்சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக நீட்டிப்பு
(1975 முதலே வில்லங்க சான்று கிடைக்கும்)

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமௌலி, பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இனி பத்திர பதிவு என்பது சுலபமானதாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

டிஜிட்டல் இந்தியாவை உருவாக வேண்டும் என மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சி மெல்ல மெல்ல நடைமுறைக்கு வருகிறது. இனி வரும் காலங்களில் மக்கள் அதிக நேரம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.