sonia gandhi: national herald case: கொரோனாவில் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வருவதால், புதிய தேதியில் ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு சம்மன்அனுப்பியுள்ளது.
கொரோனாவில் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வருவதால், புதிய தேதியில் ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு சம்மன்அனுப்பியுள்ளது.
இதன்படி சோனியா காந்தி வரும் 23ம் தேதி நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.90 கோடி கடன்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.

வழக்கு
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியி இருந்தனர்.
புதிய சம்மன்

இதில் சோனியா காந்தி திடீரென கொரோனாவில் பாதி்க்கப்பட்டதையடுத்து, அவரால் கடந்த 2ம் தேதி அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை.ஆ னால், கொரோனாவிலிருந்து படிப்படியாக சோனியா காந்தி மீண்டுவருவதையடுத்து, வரும் 23ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
இது தவிர ராகுல் காந்திக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் வெளிநாட்டில் இருந்ததால், காலஅவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து வரும் 13ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக அமாலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, பவான் பன்சாலிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
