ITR Filing |இதுவரையில் 5 கோடிக்கும் மேல் வரித்தாக்கல்! நெருங்கி வரும் காலக்கெடு! ஸ்தம்பிக்கும் போர்ட்டல்!
வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் (ஜூலை 31ம் தேதி) நிறைவடைகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8% அதிகமாகும்.
AY 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலக்கெடுவைத் தாண்டி தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் வதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, அதிகமான அளவில் வருமான வரித்தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை மட்டும் (ஜூலை 26) சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கடைசி நேரத்தில் வருமான வரித்தால் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த சனிக்கிழமை வரையில் சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.
ஜூலை 31 கடைசி தேதி.. நீட்டிப்பு கிடையாது.. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான முக்கிய அப்டேட்!
ஒரே நேரத்தில் பலரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்கையில், இணையதளத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமாவரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்னும் இருநாட்களே மீதம் உள்ளநிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஃபைலிங் இணையதள சேவையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என இன்போசிஸ் நிருவனம் உத்திரவாதம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து; பதவியை காப்பாற்றிக் கொண்ட மகாலட்சுமி
தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்; அச்சத்தில் ஒன்றிய அமைச்சர்கள்: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு!!