single use plastic ban: ஜூலை முதல் Frooti, Maaza உள்ளிட்ட குளிர்பானங்கள் நிலை எப்படி மாறப்போகுதோ?

single use plastic ban : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை மாதம் முதல் ஒட்டுமொத்த தடைவிதித்து மத்திய அ ரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால் ப்ரூட்டி, ரியல், ட்ராப்பிகானா, மாஸா போன்ற குளிர்பானங்கள் எந்த மாதிரி மாறப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

single use plastic ban : Will Tetra Pack of Frooti, Appy be Banned From July 1

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை மாதம் முதல் ஒட்டுமொத்த தடைவிதித்து மத்திய அ ரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால் ப்ரூட்டி, ரியல், ட்ராப்பிகானா, மாஸா போன்ற குளிர்பானங்கள் எந்த மாதிரி மாறப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

ப்ரூட்டி,ஆப்பே ஆகிய பானங்களை தயாரிக்கும் பார்லே நிறுவனம், பிளாஸ்டி தடைக்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரியுள்ளது. 

single use plastic ban : Will Tetra Pack of Frooti, Appy be Banned From July 1

2022, ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால் பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள் அடைத்து விற்கும் நிறுவனங்கள் கடும் அதிருப்தியும், பதற்றமும் அடைந்துள்ளன.

மத்திய அரசு வெறுப்புடன் இந்தத் தடையை பிறப்பித்துள்ளது. இந்தத் தடையால் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும், நுகர்வோர் பொருட்களிலும் எதிர்மறையான விளைவுகள் உருவாகும். மத்திய அரசின் தடையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்தத் தடையை அமல்படுத்த கூடுதலாக 6 மாதங்கள் அவகாசம் தேவை என்று பார்லி அக்ரோ நிறுவனம் விமர்சித்துள்ளது. 

single use plastic ban : Will Tetra Pack of Frooti, Appy be Banned From July 1

பால் பொருட்கள் தயாரிக்கும் அமுல் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் “ பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த அவகாசம்தேவை. சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் போதுமான அளவு பேப்பர் ஸ்ட்ராக்கள் வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை விதிக்கலாம். எங்களின் மோர் பாக்கெட்,லஸ்ஸி ஆகியவற்றில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்போது தடை விதித்தால்  பெரும் பாதிப்பு ஏற்படும். தினசரி 10 முதல் 12 லட்சம் பிளாஸ்டிக் ஸ்ட்ரா தேவைப்படுகிறது. ஆதலால் போதுமான அளவு பேப்பர் ஸ்ட்ராக்களை உருவாக்கியபின் இந்தத் தடையை அமல்படுத்தலாம் ” எனத் தெரிவித்துள்ளது

ஆதலால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல்படுத்த 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் தேவை என்று குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கோரியுள்ளன.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios