ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி செலுத்தாத ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
அக்டோபர் 1, 2023 வரையிலான காலப்பகுதியில் 18 சதவீதம் ஜிஎஸ்டிக்குப் பதிலாக 28 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ஷோ-காஸ் நோட்டீஸ்களின் மொத்தத் தொகை சுமார் ரூ. 1 லட்சம் கோடி" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1, 2023 வரையிலான காலப்பகுதியில் 18 சதவீதம் ஜிஎஸ்டிக்குப் பதிலாக 28 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. 28 சதவீத வரி விதிப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மட்டுமே பொருந்தும் என்று ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் சொல்கின்றன.
டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! தேர்வு எழுதத் தேவையில்லை!
ஆனால், மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் கொண்டுவந்த திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2023 இல், நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் மீதான வரி மாற்றப்பட்டது.
திறமை தொடர்படையதா, அதிர்ஷடம் தொடர்படையதா என்று பொருட்படுத்தாமல், அனைத்து ஆன்லைன் விளையாடுகளுக்கும் மொத்த கேமிங் வருவாயில் அல்லாமல், பந்தயத்தின் முழு மதிப்பில் 28 சதவீதத்தை ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு