ரயில் நிலையத்தில் கடைகள் வைத்தால் செம லாபமாம்.. உண்மையா? ஆனால் எப்படி அங்க கடை வைக்கிறது? முழு தகவல் இதோ!
Shops in Railway Station : உண்மையில் அக்கால இளைஞர்களை காட்டிலும் இக்கால இளைஞர்கள் சொந்த தொழில் துவங்குவதில் அதிக ஆர்வங்களை காட்டி வருகின்றனர் என்றே கூறலாம். அதற்கென்று உள்ள வழிகளை தினமும் இணையத்தில் ஆராய்ந்து வருபவர்களுக்குத் தான் இந்த பதிவு.
எந்த காலகட்டத்திலும் கை கொடுக்கும் ஒரே தொழில் உணவு தொழில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சரியான தரத்தோடு, சரியான இடத்தில் அமைக்கப்படும் உணவு சம்பந்தமான தொழில் எப்பொழுதும், தொழில் தொடங்கியவரை கைவிடுவதில்லை. அந்த வகையில் மக்கள் நாளுக்கு நாள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் உணவகங்களை அல்லது சிறு சிறு கடைகளை துவங்கினால் அது பெரிய லாபங்களை தரவல்லது என்று கூறப்படுகிறது.
பெரிய அளவில் இல்லாமல் டீ, காபி, உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில், புத்தகங்கள், சிறு சிறு பொம்மைகள், செய்தித்தாள்கள் மற்றும் பிற சிறு பொருள்களை வைத்து அவற்றை ரயில் நிலையங்களில் விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை இதில் லாபம் பார்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு தான் கெத்து! ஹைதரபாத்தில் உருவாகும் கூகுள் அலுவலகத்தைப் பாராட்டும் ஆனந்த் மஹிந்திரா!
காரணம் பண்டிகை காலம் தொடங்கி, சாதாரண நாட்கள் என்று ரயில் நிலையங்கள் என்பது எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய ஒரு இடம். ஆகவே அங்கு தொழில் தொடங்குவது என்பது மிக மிக வெற்றிகரமான ஒரு செயல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரயில் நிலையங்களில் எப்படி கடை திறப்பது?
சரி அனைவராலும் ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் கடை திறந்துவிட முடியுமா? அது அவ்வளவு எளிதா? என்று கேட்டால், அதற்கு பதில் "ஆம்" என்பதுதான்..ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்று நடை மேடைகளில் கடைகள் திறப்பதற்கான டென்டர்கள் முதலில் விடப்பட்டுள்ளதா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அப்படி டென்டர்கள் விடப்பட்டிருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த ரயில்வே மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று நாம் அந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு உங்களுடைய வாக்காளர் அட்டை, ஆதார் எண் மற்றும் பான் கார்டு போன்றவை அவசியமான ஆவணங்களாக உள்ளது. நீங்கள் டெண்டர்களை வழங்கிய பிறகு ரயில்வே துறை அதில் உரிய நடவடிக்கைகளை எடுத்து, உங்களுக்கு ரயில் நிலையங்களில் கடைகளை வைக்க அனுமதி வழங்கும். (விண்ணப்பிக்கும் அனைவரும் கிடைக்கும் என்று சொல்லமுடியாது).
வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ரயில் டிக்கெட் இருக்கா.. இனி இப்படி பயணிக்கலாம்.. முழு விபரம் இதோ !!
அனுமதி பெற்ற பிறகு நீங்கள் ரயில்வே பிளாட்பாரத்தில் உங்கள் கடையை திறந்து வர்த்தகம் செய்யலாம். ஆனால் உங்களால் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ரயில் நிலையங்களில் கடைகளை நடத்த முடியும். இதற்கான கட்டணமும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.