Share market today:பங்குசந்தையில் இன்று காலையிலிருந்து மாலை வரை வர்த்தகம் ஜோராக நடந்ததால், முதலீ்ட்டாளர்கள் குஷியாகினர். மும்பை, தேசியப் பங்குசந்தைகள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி உயர்ந்நிலையில் முடிந்தன.
பங்குசந்தையில் இன்று காலையிலிருந்து மாலை வரை வர்த்தகம் ஜோராக நடந்ததால், முதலீ்ட்டாளர்கள் குஷியாகினர். மும்பை, தேசியப் பங்குசந்தைகள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி உயர்ந்நிலையில் முடிந்தன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்துவருவது, உள்நாட்டில் பணவீக்கம் பெரிதாக அதிகரிக்கவில்லை என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க பெடரல் வங்கி, கடனுக்கான வட்டி வீதத்தை 0.25 புள்ளிகள் உயர்த்தியது. கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் வட்டியை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் கட்டுக்கடங்காத வகையில் பணவீக்கம் உயர்ந்ததையடுத்து அதைக் கட்டுப்படுத்தவே வட்டிவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டுக்குள் 6 முறை வட்டி வீதம் உயர்த்தப்படும் என்ற செய்தியும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் வலுவானது, கடினமான நிதிக்கொள்கையையும் தாங்கும் என்று பெட்வங்கி தலைவர் கூறியது முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.
அதுமட்டுமல்லாமல், பெடரல் வங்கியின் அறிவிப்பால் அமெரிக்காவின் நாஷ்டாக், ஜப்பான் பங்குச்சந்தை, ஹாங்காங் சந்தை ஆகியவை ஏற்றம் கண்டன. உலகப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருப்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதால், பங்குச்சந்தை தொடங்கும்போதே ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 850 , தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி,220 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகம் ஈடுபட்டனர். இதனால் பங்குச்சந்தையில் உற்சாகமான போக்கு காணப்பட்டதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை கைமாற்றினர்.
மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1047 புள்ளிகள் உயர்ந்து, 57,863 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 311 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,287 புள்ளிகளில் முடிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர அனைத்தும் லாபத்துடன் நகர்ந்தன. குறிப்பாக் ஹெச்டிஎப்சி வங்கி பங்கு அதிகமான லாபத்தை ஈட்டியது. தவிர, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கோடக் வங்கி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகளும் லாபத்துடன் மைமாறின

நிப்டியில் உலோகம், வங்கி, ரியல்எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் துறை ஆகியவற்றின் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டின. ஆட்டோமொபைல், நிதித்துறை, ஐடி, ஊடகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, தனியார் துறை வங்கி, ஆகிய துறைகள் லாபத்துடன் செல்கின்றன
நாளை சந்தை செயல்படுமா
நாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு மும்பை, தேசியப் பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை அடுத்து திங்கள்கிழமைதான் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கும்
