share market today :ரிசர்வ் வங்கியின் திடீர் வட்டிவீத அதிகரிப்பால் நேற்று மோசமான சரிவைச் சந்தித்த இந்திய, மும்பைப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டுள்ளன. 

ரிசர்வ் வங்கியின் திடீர் வட்டிவீத அதிகரிப்பால் நேற்று மோசமான சரிவைச் சந்தித்த இந்திய, மும்பைப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டுள்ளன. 

பெடரல் வங்கி

வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்துவோம் என்று பெடரல் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி நேற்று கடனுக்கான வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது.கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக இதுபோன்று 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அமெரி்க்கப் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் நல்ல லாபத்தில் முடிந்துள்ளன. இந்த எதிரொலி, ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று இருந்து. ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான் பங்குச்சந்தையிலும் சாதகமான போக்கு காணப்பட்டது.

இதனால் இந்தியப் பங்குச்சந்தையிலும் காலை முதல் முதலீட்டாளர்கள் நேர்மறையான எண்ணத்தோடு வர்த்தகத்தில் ஈடுபட்டு தகவல் தொழில்நுட்ப பங்குகளையும், வங்கிப்பங்குகளையும் ஆர்வத்துடன் வாங்கினர்.

மீண்டது பங்குச்சந்தை

இதனால், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 516 புள்ளிகள் அதிகரித்து, 56,185 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 157 புள்ளிகள் அதிகரித்து, 16,834 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

நிப்டியில் ஹின்டால்கோ, இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, டெக் மகிந்திரா பங்குகள் அதிக லாபத்துடன் நகர்கின்றன. நெஸ்ட்லே, அப்பலோ மருத்துவமனை, டாடா நுகர்வோர் பொருட்கள், ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் இன்போசிஸ், டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, விப்ரோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா , கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமடைந்தன. நிப்டியில் உலோகம், வங்கி, நிதிச்சேவை, தகவல்தொழில்நுட்பம் ஆகிய துறைப் பங்குகள் 2 சதவீத வளர்ச்சியுடன் உள்ளன. எப்எம்சிஜி, நுகர்வோர் பொருட்கள் பிரிவு துறை சரிவில் உள்ளன