Share market today: மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
உற்சாகம்
பங்குச்சந்தை காலை வர்த்தகத்தை தொடங்கும் முன்பே, மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்தது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

சர்வதேச காரணிகள்
சர்வதேச காரணிகள் அனைத்தும் சாதகமாக, இருப்பதால் அது பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் அளித்த பேட்டியில் “ பெடரல் வங்கி தேவைப்பட்டால் அடுத்தடுத்து வட்டி வீதத்தை உயர்த்தி பணவீ்க்கத்தை கட்டுப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அடுத்த கட்டமாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்து நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பங்குச்சந்தையில் இருந்து கடந்தசில வாரங்களாக முதலீட்டை எடுத்துவந்த அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் ரூ.384 கோடி முதலீடு செய்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை
இந்தியாவில் பணவீக்கம் கவலைப்படும்அளவுக்குச் செல்லாது, பொருளாதார வளர்ச்சிக்கு குறைவு பற்றி அச்சப்படத்தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

ஏற்றம்
இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கவும், கைமாற்றவும் செய்தனர். இதனால் சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்து, 58,402 புள்ளிகளில் வர்த்தகம் நடந்துவருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 123 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,439 புள்ளிகளி்ல வர்த்தகம் நடந்து வருகிறது.
லாபம்
நிப்டியில் பங்குகளில் ஹின்டால்கோ, ஐஓசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. பார்திஏர்டெல், பிரிட்டானியா, கோல் இந்தியா, சிப்லா, ஹீரோமோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் என்டிபிசி மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் மட்டுமே சரிவை நோக்கி நகர்கின்றன, மற்ற 28 பங்குகளும் ஏற்றத்தில் செல்கின்றன.
