share market today : பங்குச்சந்தை இன்று 2-வது நாளாக மும்பை, தேசியப் பங்குச்சந்தை வர்த்தகத்தைத் ஏற்றத்துடன் முடித்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
பங்குச்சந்தை இன்று 2-வது நாளாக மும்பை, தேசியப் பங்குச்சந்தை வர்த்தகத்தைத் ஏற்றத்துடன் முடித்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
பொருளாதார வளர்ச்சி
சர்வதேச நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரி்க்கும் என தெரிவித்துள்ளதும், இந்தியாவின் பொருளாதாரம் வளர்வது உலகிற்கே நல்லது என்று தெரிவித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தவிர நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்ததால், ஆர்வத்துடன் முதலீட்டில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கடந்த இரு நாட்களாக சரிந்துவந்த கச்சா எண்ணெய் விலை இன்று உயரத் தொடங்கியுள்ளது.பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒருடாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதையும் முதலீட்டாளர்கள் கவனித்தனர்.
ஏற்றம் தொடர்ந்தது
காலையில் ஏற்றத்துடன் தொடங்கியப் பங்குச்சந்தை பிற்பகலுக்குப்பின் நல்ல முன்னேற்றத்துடன் வர்தத்கத்தை நகர்த்தியது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் பங்குகள், முதலீட்டுப் பங்குகள், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி பங்குகள் ஏற்றதுடன் இருந்து பங்குச்சந்தையை உயர்த்தின.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 874 புள்ளிகள் அதிகரித்து, 57,911 புள்ளிகளில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 256 புள்ளிகள் உயர்ந்து, 17,392 புள்ளிகளில் வர்த்தகத்தை முடிந்தது.

நிப்டி
காலை வர்த்தகத்தை 2,252 பங்குகள் ஏற்றம் கண்டன, 1089 பங்குகள் மதிப்பு சரிந்துள்ளன, 96 பங்குகள் மதிப்பு மாறாமல் உள்ளது.
எய்சர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, மாருதி சுஸூகி, அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் நிப்டியில் லாபமடைந்தன. சிப்லா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓஎன்சிஜி, ஜேஎஸ்டபிள்யு ஆகிய பங்குகள் சரிவடைந்தன.
நிப்டியில் வங்கித்துறை, மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், ரியல்எஸ்டேட், மின்துறை, முதலீட்டுத் துறை பங்குகள் 2சதவீதம் வரை உயர்ந்தது. அதிகபட்சமாக ஆட்டோமொபைல் துறை பங்குகள் 2.52 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. வங்கி, நிதிச்சேவை, தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை, பொதுத்துறை, தனியார் துறை ஆகிய பங்குகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்தன.

மும்பைப் பங்குச்சந்தை
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, டிசிஇஎஸ், இன்போசிஸ் பங்குகள் மதிப்பு உயர்ந்தன. 30 பங்குகளில் டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, பார்தி ஏர்டெல் பங்குகள் மட்டுமே சரிவடைந்தன மற்ற 27 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் முடிந்தன
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரைவில் புதிய சாதனையை படைக்க இருக்கிறது. நாட்டிலேயே ரூ.19 லட்சம் கோடி மதிப்பு கொண்டநிறுவனமாக மாற இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு மதிப்பு உயர்ந்ததும் பங்குச்சந்தை உயரக் காரணமாகும்.

கடந்த 3 நாட்களில் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் மதிப்பு 10சதவீதம் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் மதிப்பு ரூ.18.85 லட்சம் கோடியை எட்டியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.2,787.10 ஆக அதிகரித்தது. இதற்கு முன் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு அதிகபட்சமாக 2021ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ரூ.2,750 ஆகத்தான் இருந்தது. அதைவிட இன்று மதிப்பு அதிகரித்தது.
