share market today: மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலைசரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து, ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலைசரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து, ஏற்றத்துடன் முடிந்தது.நிதியாண்டின் முதல்நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் முடித்துள்ளன.

தொடக்கம் சரிவு

அமெரிக்காவில் முதல்காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானதால் பெரும்பாலான பங்குகள் விலை சரிந்தன. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத சரிவை நேற்றை காலாண்டு சந்தித்தது. நாஷ்டாக் 1.54% சரிந்தது. இந்த பாதிப்பின் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும், ஐரோப்பிய பங்குச்சந்தையிலும் இருந்தது. ஆசியப்பங்குச்சந்தைகளில் நிக்கி1.29%, டாபிக்ஸ் 1.2% சதவீதமும் சரிந்தன.

இந்த பாதிப்பு இந்தியப் பங்குச்சந்தையிலும் காலையில் எதிரொலித்ததால், வர்த்தகம் ஊசலாட்டத்துடன் தொடங்கி சரிவைநோக்கி நகர்ந்தது. 
ஆனால், அமெரிக்கா தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பை வெளியேற்றி விலைவாசியைக் குறைக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராகச் சரிந்தது.

முதலீட்டாளர்கள் உற்சாகம்

இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளை ஆர்வத்துடன் வாங்கத்தொடங்கினர். பிற்பகலுக்குப்பின் சந்தையில் வர்த்தகம் மும்முரமாக நடந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது குறிக்கோளாக இருப்பதால், அடுத்தவாரம் வரும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்படாது என்ற தகவல் வெளியானது. இவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஏற்றம்

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 708 புள்ளிகள் உயர்ந்து, 59,277 புள்ளிகளில் வர்த்தகத்தை ஏற்றத்துடன் முடித்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 206 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 17,670 புள்ளிகளில் வர்த்தகத்தை உயர்வுடன் முடித்தது.

30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன, மீதமுள்ள 25 பங்குகள் லாபத்தில் சென்றது. 

லாபம்

டெக் மகிந்திரா, டாக்டர்ரெட்டீஸ், சன்பார்மா, டைட்டன் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன. என்டிபிசி, பவர்கிரிட், பார்தி ஏர்டெல், ஓன்ஜிசி, பிபிசிஎல்,டாடா ஸ்டீல், ஐடிசி, கோடக் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்டஸ்இன்ட்வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனாஸ்,ஆக்சிஸ் வங்கி, மாருதி சுஸூகி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன

 நிப்பிடியில் உலோகம், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சக்தி, பொதுத்துறை வங்கிகள், வங்கிகள் ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்திலும் தகவல்தொழில்நுட்பத்துறை, மருந்துத்துறை, ஆகிய துறை பங்குகள் சரிவிலும் உள்ளன.