தீபாவளி முகூர்த்த வர்த்தகத்துக்கு அடுத்தநாளான இன்று, மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

தீபாவளி முகூர்த்த வர்த்தகத்துக்கு அடுத்தநாளான இன்று, மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

தீபாவளிப் பண்டிகையான நேற்று மூகூர்த்த வர்த்தகத்தில் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 0.9% உயர்ந்து, 17,738 புள்ளிகளில் நிலைபெற்றது. மும்பைப் பங்குசந்தையில் சென்செக்ஸ், 0.9சதவீதம் அதிகரித்து, 59,832 புள்ளிகளில் நிலைபெற்றது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு பச்சைக் கொடி! தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி

இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் உற்சாகமாக தொடங்கியுள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 32 புள்ளிகள் உயர்ந்து, 17,663 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 175 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியதால், 60ஆயிரத்தை புள்ளிகள் கடந்து வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய 30 நிறுவனப் பங்குகளிள் 14 நிறுவனப் பங்குகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, 16 நிறுவனப் பங்குகள் சரிவுடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.
ஐசிஐசிஐ வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ், சன் பார்மா, மாருதி சுஸூகி, அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நிப்டியில் லாபமீட்டி வருகின்றன. யுபிஎல், பஜாஜ்பின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, பவர் கிரிட் கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன

அமெரிக்க பெடரல் வங்கி இந்த வாரத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஆசியச் சந்தையில் பங்குகள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தன.

இனி கொரோனா தடுப்பூசி கொள்முதல் இல்லை!ரூ.4 ஆயிரம் கோடியை திரும்ப ஒப்படைக்கிறது சுகாதாரத் துறை

இது தவிர சீனாவின் பங்குச்சந்தையும் வீழ்ச்சி அடைந்தன, யுவான் மதிப்பும் சரிந்தது.
ஆசியச் சந்தையின் பாதிப்பு இன்று இந்தியப் பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா என்பது இன்றைய வர்த்தகத்தின் முடிவில் தெரியும். மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.