share market today : சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பெட் வங்கியின் அறிவிப்பு ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் பெருத்த சரிவுடன் தொடங்கியது.

சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பெட் வங்கியின் அறிவிப்பு ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் பெருத்த சரிவுடன் தொடங்கியது. 

விலை சரிவு

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 105.67 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் 100.98 டாலராகவும் சரிந்தது. 

பணவீக்க கட்டுப்பாடு

அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், வட்டிவீதம் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது. இது சர்வதேச சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச பங்குச்சந்தைக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பொருளாதாரத் தடைகள்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்தியநாடுகள் ஆலோசித்து வருகின்றன. அவ்வாறு விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி கடினமாகும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சினார்.

இதனால் ஆசியப் பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. ஜப்பானின் நிக்கி 1.5%, தென் கொரியப் பங்குச்சந்தை 0.8%, ஆஸ்திரேலியப் பங்குச்சந்தை1.2% சரிந்தன. சீனப் பங்குச்சந்தை இருநாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று காலை தொடங்கியதிலிருந்து ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது.

படு வீழ்ச்சி

இந்த காரணிகள் இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. வர்த்தகம் தொடங்கும் முன்பை மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வீழ்ச்சிஅடைந்தன, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 17,900 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. 

மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால், சென்செக்ஸ் 450 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது, நிப்டி 17,850 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.

வங்கித்துறை சரிவு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன, மற்றவை இழப்பில் உள்ளன. குறிப்பாக, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், லார்சன் டூப்ரோ, சன்பார்மா, டைட்டன், பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் நகர்கின்றன

மறாக, ஹெச்டிஎப்சி ட்வின்ஸ்,டெக் மகிந்திரா, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கித்துறை பங்குகள் கடும் சரிவில் உள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் உலோகம், ஊடகம், பொதுத்துறை வங்கிகள் பங்குகள் மட்டுமே லாபத்துடன் நகர்கின்றன. வங்கி, ஆட்டோமொபைல், எப்எம்சிஜி,த கவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை, ரியல்எஸ்டேட் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவில் உள்ளன.