share market today :தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தின் முதல்நாளான இன்று சரிவு முடிந்தது. காலை நேரத்தில் பெரியசரிவுடன் தொடங்கி பிற்பகலில் அதிலிருந்து மீண்டாலும் முழுமையாக மீளவில்லை.
தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை வர்த்தகத்தின் முதல்நாளான இன்று சரிவு முடிந்தது. காலை நேரத்தில் பெரியசரிவுடன் தொடங்கி பிற்பகலில் அதிலிருந்து மீண்டாலும் முழுமையாக மீளவில்லை.
ஐடி பங்குகள்
தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் நல்ல லாபமீட்டி உயர்ந்தன. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளால் 4 சதவீதம் சரிந்தது. கடந்த 6 செஷன்களில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 10% வீழ்ச்சி அடைந்துள்ளன.

எல்ஐசி ஐபிஓ இன்று மாலையுடன் நிறைவடைகிறது. எதிர்பார்த்ததைவிட பாலிசிதார்ரகள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை விட வாங்க இரு மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. இதன் முழுமையான விவரங்களை செபி இன்று இரவுதான் வெளியிடும்.
பெடரல் வங்கி
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி(தலைமைவங்கி) வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதுவரை 75 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வட்டிவீதம் உயர்வு போதாது, இன்னும் அதிகளவு வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின்கட்டுப்பாட்டு அளவைவிட தாண்டிச் சென்றதால், ரிசர்வ் வங்கி, கடந்த வாரத்தில் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. இந்தஇரு நிகழ்வுகளும் இந்தியப் பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது.
முதலீட்டாளர்கள் தயக்கம்
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்திவருவதால், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து வருகிறது.கடந்த 6ம் தேதி மட்டும் ரூ.5,517 கோடிக்கு பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். கடந்த 7 மாதங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறுவதுதொடர்ந்து வருகிறது. இதுவரை 7 மாதங்களில் ரூ.1.65 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள்பங்குச்சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன.
வட்டி வீதம் உயர்வு
அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டிவீதத்தை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரு காரணிகளும் இந்தியப் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை காலையில் ஏற்படுத்தியதால் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

சரிவு
இந்த சரிவிலிருந்து பிற்பகலில் பங்குச்சந்தை மீள்வதற்கு முயன்றாலும் முழுமையாக மீளவில்லை. மாலை வர்த்தகம் முடிவில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 54,470 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 109 புள்ளிகள் சரிந்து, 16,301 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.
பவர்கிரிட் சூப்பர்
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 18 பங்குகள் லாபத்துடனும், 12 பங்குகள் சரிவுடனும் முடிந்தன. பவர்கிரிட் நிறுவனப் பங்கு 52 வாரங்களில் இல்லாத உயர்வை அடைந்தது. வங்கித்துறை பங்குகளான ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, டைட்டன், டாடா ஸ்டீல், ஹெச்யுஎல், ஐடிசி, டெக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி, ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் முடிந்தன.
பவர்கிரிட், இன்போசிஸ், ஹெச்சிஎல், மாருதி, பஜாஜ்பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், விப்ரோ, லார்சன் அன்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனப்பங்குகள் லாபமடைந்தன.
![]()
ரிலையன்ஸ்க்கு அடி
நிப்டியில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட்வங்கி, டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் சரிந்தன. பவர்கிரிட், ஹெச்சிஎல், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், டிவிஸ் லேப்ஸ் பங்குகள் லாபமடைந்தன.
நிப்டியில் எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், எப்எம்சிஜி, மின்துறை, ரியல்எஸ்டேட், உலோகம், பொதுத்துறை வங்கி, ஆகியவை 2 சதவீதம் வரை சரிந்தன
