share market today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி, வீழ்ச்சியுடன் முடிந்தது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி, வீழ்ச்சியுடன் முடிந்தது. கடந்த 2 நாட்களாக காளையின் ஆதிக்கம் இருந்த நிலையில் இன்று கரடியின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளது
தொடக்கமே சரிவு
அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்தால், அந்த தாக்கம் இந்தியப்பங்குசந்தையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் வர்த்தகம் தொடங்கும்முன்பே சரிவுடன் இருந்தன.

கச்சா எண்ணெய்விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வந்தநிலையில் இன்று திடீரென பேரலுக்கு 2 டாலர் அதிகரி்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையியான போரில் ரஷ்யா மீது தடைகள் தீவிரமாகும் என்ற எதிர்பார்ப்பு, ஈரானுடன் பேச்சு வார்த்தை நிறுத்தம் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
வாகன விற்பனை
உள்நாட்டில் மோட்டார்வாகனங்களுக்கான விற்பனை சரிந்திருப்பதும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருவதும் முதலீட்டாளர்களுக்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100புள்ளிகள் சரிவுடனும், நிப்டி 18,050 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தும் வர்த்தகத்தை தொடங்கின. இந்த சரிவு பிற்பகலில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்தது
வீழ்ச்சி
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிந்து, 60,176 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 96 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் 17,957 புள்ளிகளில்நிலைபெற்றது.

இன்றையவர்த்தகத்தில் 2,280 பங்குகள் லாபமடைந்தன, 1035 பங்குகள் சரிவைச் சந்தித்தன, 97 பங்குகள் விலை மாறவில்லை
நிப்டியில் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், கோடக் மகிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. அதானி போர்ட்ஸ், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், டாடா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் ஆகிய பங்குகள் லாபமடைந்தன
ஐடிசி, டிசிஎஸ்
மும்பைப் பங்குசந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் ஐடிசி பங்குகள் 2.5 சதவீதம் வளர்ச்சி அடைந்தன. டிசிஎஸ், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்யுஎல் ஆகிய பங்குகள் 1.6% வளர்ச்சி அடைந்தன. நுகர்வோர் துறை, எப்எம்சிஜி, ஆட்டோமொபைல், மின்சக்தி ஆகியதுறைகளும் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்தன

நிப்டியில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, உலோகம், மருந்துத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபத்தில் செல்கின்றன. மாறாக, வங்கி, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், ஊடகம்,நிதிச்சேவை, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சரிவில் உள்ளன
