Asianet News TamilAsianet News Tamil

share market today: 4 ஆண்டுகளில் இல்லாத அளவு மகிந்திரா பங்குகள் உயர்வு: பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமென்ன?

share market today : Why is share market going up today? Key factors that drove Sensex, Nifty on Monday's trade மும்பை மற்றும் இந்தியப் பங்கு்சசந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து உயர்வுடன் உள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனப் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வடைந்துள்ளது. 

share market today :  Mahindra and Mahindra share price rises to 4year high  Here s why
Author
Mumbai, First Published May 30, 2022, 2:27 PM IST

மும்பை மற்றும் இந்தியப் பங்கு்சசந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து உயர்வுடன் உள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனப் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வடைந்துள்ளது. 

மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 47.8சதவீதம்அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று அந்த நிறுவனப்பங்குகள் முதலீட்டாளர்கள் போட்டிபோட்டு வாங்கினர். இதனால் மகிந்திரா பங்குகள் விலை 4 சதவீதம் உயர்ந்தது.

share market today :  Mahindra and Mahindra share price rises to 4year high  Here s why

மகிந்திரா நிறுவனப் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வை அடைந்தது. மகிந்திர நிறுவனத்தின் பங்குகள் 41 புள்ளிகள் உயர்ந்து, ரூ994க்கு விற்பனையாகின,நிப்டியில் 42 புள்ளிகள் ஏற்றம் கண்டது. 

 குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக வெளியான செய்தியையடுத்து டாடா நிறுவனத்தின் பங்குகளும் இன்று உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை 2.3 சதவீதம் உயர்ந்தது.மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 300  புள்ளிகளுக்கு அதிகமாகம் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. 

share market today :  Mahindra and Mahindra share price rises to 4year high  Here s why

பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமென்ன

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இனிமேல் பொருளாதார சுழற்ச்சி வேகமெடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நிப்டியில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் 3.6 சதவீதம் உயர்ந்தன. ஹெச்சிஎல், இன்போசிஸ், பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன. 

share market today :  Mahindra and Mahindra share price rises to 4year high  Here s why

ஜியோஜித் நிதிச் சேவை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே.விஜயகுமார் கூறுகையில் “ பங்குச்சந்தை உயர்வுக்கு ஐடி துறை பங்குகள் உயர்வுதான் முக்கியக் காரணம். சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் இனிவரும் நாட்களில் பொருளாதார சுழற்ச்சி வேகமெடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகள் வாங்கினர்” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios