share market today: மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து2-வது நாளாக சரிவுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகளின் தாக்கம் பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து2-வது நாளாக சரிவுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகளின் தாக்கம் பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரி்க்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தது. அந்த வட்டிவீதம் 50 புள்ளிகள் வரை இருக்கலாம் என்று நேற்று தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அமெரி்க்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக்கும் சரிவுடன் வர்தத்கத்தை முடித்தது.
இதன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் இருந்து வருகிறது. ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ், சீனாவின் ஷாங்காய், ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வரும் நிதிக்கொள்கையில் வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாகச் சரிந்துவந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் 1.5 சதவீதம் உயர்ந்து பேரல் 102.39 டாலர்களாகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் 1.2 சதவீதம் அதிகரித்து, 97.41 டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் இருப்பதால் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை. பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே சென்செக்ஸ் 200 புள்ளிகள்வரை குறைந்தது. காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 59,301 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறதுதேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 81 புள்ளிகள் சரிந்து, 17,726 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 11 பங்குகள் லாபத்திலும் 19 பங்குகள் சரிவிலும் உள்ளன. ஏசியன்பெயின்ட்ஸ், சன்பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர்ரெட்டீஸ், ஐசிஐசிஐ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிசிபிசி, ஐடிசி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள்லாபத்தில் நகர்கின்றன. மற்ற பங்குகளான ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ்,ஹெச்சிஎல்டெக் ,ரிலையன்ஸ், மாருதி, பார்தி ஏரெடெல், மாருதி,கோடக் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவில் உள்ளன.
