Share market today:ரஷ்யா-உக்ரைன் போர் , கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகள் இருந்தபோதிலும் அதையும் மீறி, மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் வர்த்தகம் நீண்ட நாட்களுக்குப்பின் உயர்வுடன் முடிந்தது.
ரஷ்யா-உக்ரைன் போர் , கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகள் இருந்தபோதிலும் அதையும் மீறி, மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் வர்த்தகம் நீண்ட நாட்களுக்குப்பின் உயர்வுடன் முடிந்தது.

சர்வதேச காரணிகள்
உக்ரைன்-ரஷ்யா போர், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு அமெரி்க்கத் தடை போன்றவை எந்த விதத்திலும் பங்குச்சந்தையில் பாதிக்கவில்லை. நேட்டோவில் சேர்வதற்கு முயற்சிக்கவில்லை என்று உக்ரைன் அதிபர் பேசியது போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று முதலீட்டாளர்கள் நம்பினர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையி்ல் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக உயர்ந்திருந்தது, ஆனால், இன்று 3 சதவீதம் குறைந்தது.

ஏற்றம்
கடந்த 5 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்தநிலையில் இன்று காலை முதல் முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கியதால், பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 1223 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 54,731 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 338 புள்ளிகள் அதிகரித்து 16,352 புள்ளிகளில் நிலைகொண்டது.

லாபமடைந்த பங்குகள்
மும்பைப் பங்குச்சந்தை, நிப்டி ஆகியவற்றில் ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், இன்டர்ஸ்ட்ரீஸ் , பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் வரை உயர்ந்தன. இதுதவைர இன்டஸ் இன்ட் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்டெஎப்சி, மாருதி சுஸூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் முடிந்தன

சரிவு, லாபம்
அதேசமயம், ஸ்ரீ சிமெண்ட், ஓஎன்சிஜி, பவர்கிரிட், என்டிபிசி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன.
நிப்டியில் ரியல் எஸ்டேட் துறை, ஆட்டமொபைல், வங்கி, நிதித்துறை, தனியார்வங்கி, பொதுத்துறை வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை ஆகிய துறைகளின் பங்குகள் நல்ல லாபத்தில் விற்பனையாகின

உலகச் சந்தைகள்
அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்த தொடக்கத்திலிருந்தே உயர்வுடன் காணப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்ததால் பங்குச்சந்தையில் பங்குகள் ஆர்வத்துடன் கைமாறின
நாஷ்டாக், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய், ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்வுடன் முடிந்தன.
