ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 5-வது நாளாக வீழ்ச்சி காணப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 5-வது நாளாக வீழ்ச்சி காணப்பட்டது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான தணியாத போர் பதற்றம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தவிருக்கும் அச்சம் பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே எதிரொலித்தது

இதனால் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவு காணப்பட்டது, சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்தநிலையில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுந்த செய்திக்குப்பினும் நேற்று இரவு உக்ரைனுக்கும், உள்நாட்டுப்படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் உக்ரைன் மக்கள் சிலர் கொல்லப்பட்டது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகம் நேற்று மாலை முடிவில் 57,683 புள்ளிகளில் இருந்த நிலையில் 56,408 புள்ளிகளில் இருக்கிறது. தேசியப்பங்கு்சந்தையான நிப்டியில் 200 புள்ளிகள் சரிந்து 17,066புள்ளிகளில் இருக்கிறது.
இது தவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உக்ரைன் ரஷ்யா பதற்றம் காரணமாக ஒரு பேரல் 97 டாலராக உயர்ந்துள்ளது.
