Share market today:ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால், மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால், மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
உக்ரைன்-ரஷ்யா போர், சர்வதேச சந்தையி்ல் கச்சா எண்ணெய் விலை பேரல் 118 டாலராக உயர்ந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

வர்த்தகம் இன்று காலை தொடங்கியவுடன் 700 புள்ளிகள் சரிந்து மேலும் 50 புள்ளிகளை இழந்து, 54,339 புள்ளிகளில் வர்தத்கத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் 208 புள்ளிகள் சரிந்து, 16,238 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.
மும்பைப் பங்குச்சந்தையில் 2 பங்குகள் மட்டுமே காலை எழுச்சியுடன் உள்ளன. என்டிபிசி, டாடா ஸ்டீல் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன. மற்ற 28 பங்குகளும் அதாவது, ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, டைட்டன், விப்ரோ, பஜாஜ் ட்வின்ஸ், கோடக் வங்கி, ஹெச்யுஎல், மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்போசிஸ், ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனப் ப ங்குகள் இழப்பைச் சந்தித்து வருகின்றன.
நிப்டியில் ஆட்டமொபைல் நிறுவனங்களான ஹீரோ, எய்ச்சர், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பஙH்குகள் சரிந்தன. டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு, என்டிபிசி, பிபிசிஎல், யுபிஎல் பங்குகள் லாபத்தில் செல்கின்றன.உலோகப் பங்குகளைத் தவிர, வங்கி, நிதித்துறை, ஆட்டமொபைல், ஐடி, ரியல்எஸ்டேட், மருந்துத்துறை, நுகர்வோர் பொருட்கள் பிரிவு பங்குகள் இழப்பைச்சந்தித்துள்ளன

ஜியோஜித் பைனான்ஸியல் சர்வேஸீன் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ ரஷ்யா உக்ரைன் இடையிலான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை உலகப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு மாறுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கச்சா எண்ணெய் 75 டாலராகஇருப்பதை வைத்துதான் பொருளதார வளர்ச்சியை அரசும், ரிசரவ் வங்கியும் கணித்தார்கள் இப்போது பேரல் 118 டாலராக அதிகரித்துவிட்டது நிச்சயம் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட கணக்குகள் மாறும். ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் வட்டியை உயர்த்த வேண்டியுள்ளது.

கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்தால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும், வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும். நாட்டின்பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால், முதலீட்டாளர்கள் அச்சமடைந்து, பங்குகளில்முதலீட்டை தவிர்ப்பதால் சரிவு தொடர்கிறது” எனத் தெரிவித்தார்
