Asianet News TamilAsianet News Tamil

Share Market Today Live: பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் ! சென்செக்ஸ், நிப்டி ஏற்ற இறக்கம்: பஜாஜ் பங்கு சரிவு

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

Sensex gains 150 points, Nifty is close to 18,100, while the Bajaj twins decline.
Author
First Published Jan 5, 2023, 9:43 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நேற்று ஆலோசனைநடத்தியது. இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால்கடந்த 2 நாட்களாக உலகச் சந்தைகள் பதற்றத்துடன் இருந்தன.

Sensex gains 150 points, Nifty is close to 18,100, while the Bajaj twins decline.

ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானதுதான். ஆனால், வட்டிவீதத்தை அதிகரிக்கப் போவதில்லை. குறைந்த அளவில்தான் வட்டிவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியால் ஆசிய, இந்திய பங்குச்சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்து உற்சாகமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசியச் சந்தையிலும் இன்று உயர்வான போக்கு காணப்பட்டது.

அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையும் வர்த்தகம் தொடங்கும் முன்பே 178 புள்ளிகள் உயர்ந்திருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தாலும் பின்னர் சிறிது நேரத்தில் சரிந்தது.  சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்வுடன்,  60,673 புள்ளிகள் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: என்ன காரணம்?

Sensex gains 150 points, Nifty is close to 18,100, while the Bajaj twins decline.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 22 புள்ளிகள் அதிகரித்து, 18,062 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 21 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 9 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. டிசிஎஸ், டாடா ஸ்டீல், மாருதி, டைட்டன், இன்போசிஸ், பவர்கிரிட், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனாஸ் பங்கு மதிப்பு குறைந்துள்ளது.

பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன? ரூ.2.70 லட்சம் கோடி அம்போ! சென்செக்ஸ் நிப்டி வீழ்ச்சி

Sensex gains 150 points, Nifty is close to 18,100, while the Bajaj twins decline.

நிப்டியில், பொதுத்துறை வங்கி, மருந்துத்துறை, உலோகம், ஆட்டோமொபைல், எப்எம்சிஜி துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. நிதிச்சேவை, தகவல்தொழில்நுட்பம், ரியல்எஸ்டேட், கட்டுமானம், ஊடகத்துறை பங்குகள் சரிவில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios