Asianet News TamilAsianet News Tamil

Share Market Today: மந்தமாகத் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சரிவு! உலோகப் பங்கு லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தையில்சரிவு காணப்படுகிறது.

Sensex falls for the second consecutive session, Nifty falls below 18700; metals and
Author
First Published Dec 5, 2022, 9:50 AM IST

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தையில்சரிவு காணப்படுகிறது.

சர்வதேச சூழல் ஏற்றம், இறக்கம் கலந்து காணப்படுவது, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் வரும் புதன்கிழமை நடக்கிறது. இந்த கூட்டத்தில் என்னவிதமான முடிவு எடுக்கப்படும், வட்டி எந்த அளவு உயர்த்தப்படும் எனத் தெரியவில்லை. சந்தை வல்லுநர்கள் 35 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்படலாம் என்று கருத்து தெரிவித்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

தினசரி வரலாறு படைக்கும் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் சாதனை: ஐடி,உலோகம் லாபம்

Sensex falls for the second consecutive session, Nifty falls below 18700; metals and

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் அமெரிக்க பங்குச்சந்தை சரிவுடன் முடிந்ததால், அதன் எதிரொலி ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் சிறப்பாக இருந்தபோதிலும், பெடரல் வங்கியின் உறுதியான அறிவிப்பு வராதவரை முதலீட்டாளர்கள் ஊசலாட்டத்திலேயே உள்ளனர்.

சீனாவில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கடும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த அந்நாட்டு அரசு சம்மதித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகப் பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்கு வருவதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இதனால், ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழல் நிலவுகிறது.

7நாட்களுக்குப்பின் பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் நிப்டி, வீழ்ச்சி

இந்தியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே சரிவு காணப்பட்டது. வர்த்தகம் முறைப்படி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டதும், சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிந்து, 62,683 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது,

Sensex falls for the second consecutive session, Nifty falls below 18700; metals and

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி,43 புள்ளிகள் வீழ்ந்து, 18,652 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 11 நிறுவனப் பங்ககுள் லாபத்திலும், மற்ற 19 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, ஐடிசி, மாருதி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஓஎன்ஜிசி, யுபிஎல் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன. ஹெச்டிஎப்சி, ஹெச்யுஎல், நெஸ்ட்லே இந்தியா, எஸ்பிஐ காப்பீடு, மகிந்திரா அன்ட் மகிந்திராநிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.

பங்குச்சந்தையில் பலத்த அடி! காரணம் என்ன? சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி

நிப்டியில், உலோகம், பொதுத்துறை வங்கி,ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன. எப்எம்சிஜி, ஐடி, நிதிச்சேவை பங்குகள் விலை குறைந்துள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios