மும்பை, தேசியப்பங்குச் சந்தை தொடர்ந்து 4-வது இன்றும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 17,100 புள்ளிகளுக்கும் குறைந்தது.
மும்பை, தேசியப்பங்குச் சந்தை தொடர்ந்து 4-வது இன்றும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 17,100 புள்ளிகளுக்கும் குறைந்தது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான பதற்றமான சூழல், அமெரி்க்க பெடரல் வங்கி மார்ச் மாதத்தில் கடனுக்கான வட்டி வீதத்தைஉயர்த்தும் எனும் அச்சத்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.
அதுமட்டும்லாமல் உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்,நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு பேரல் 94 டாலருக்கு பிரன்ட் கச்சா எண்ணெய் விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்கள் அதைவாங்குவதற்காக அதிக அளவில் டாலரைக் கோருவதால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. பங்குகளின் மீதான முதலீட்டைக் குறைத்து, பாதுகாப்பான முதலீடாக இருக்க வேண்டும் என்பதால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் பக்கம் முதலீட்டைத் திருப்பியுள்ளனர்.
இதன் காரணாக தொடர்ந்து 4-வது நாளாக மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம்தொடங்கியதிலிருந்து சரிவுமுகமாக இருந்து வருகிறது. வர்த்தகம் தொடங்கும்போது, 260 புள்ளிகள் சரிந்து 57,572 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது, நிப்டியும் 69 புள்ளிகள் சரிந்து 17,207 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பித்தது. ஆனால், நேரம் செல்லச்செல்ல முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால், 500 புள்ளிகளுக்கும் கடந்து 628 புள்ளிகளாகச் சரிந்தது. நிப்டி 180 புள்ளிகளாகக் குறைந்தது.
![]()
பஜாஜ் பின்சர்வ், நெஸ்டில், ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட் டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
நிப்டியில் ஹெச்டிஎப்சிலைப், டாடா கன்சூமர், யுபிஎல், பிரிட்டானியா, எஸ்பிஐ, பஜாஜ் பின்சர்வ், ஸ்ரீ சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்தனடாக்டர் ரெட்டீஸ், என்டிபிசி, பவர்கிரிட், இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகத்ிதல் உள்ளன
