வாரத்தின் பாதி நாட்கள் மும்பை, தேசியப்பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் வலுத்திருந்தது. கடைசிநாளன இன்றும் சரிவுடனே சந்தையில் வர்த்தகம் முடிந்தது.

வாரத்தின் பாதி நாட்கள் மும்பை, தேசியப்பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் வலுத்திருந்தது. கடைசிநாளன இன்றும் சரிவுடனே சந்தையில் வர்த்தகம் முடிந்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றமான சூழல், எந்தநேரமும் ரஷ்யா படையெடுக்கும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கை, கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரலாம், விலை உயரலாம் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை, பங்குகளை வாங்குவதிலும் தயக்கம்காட்டினர். இதனால் சந்தையில் கடந்த இருநாட்களைப் போன்று சந்தையில் ஊசலாட்டமும், நிலையற்றதன்மையும் தொடர்ந்தது

வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிந்து,57,833 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 28 புள்ளிகள் சரிந்து 17,276 புள்ளிகளில் நிலைகொண்டது.

மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட்டூப்ரோ, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி பங்குகள் லாபமடைந்தன.

தேசியப்பங்குச்சந்தையில் கிலாண்ட் ஃபார்மா, ஹனிவெல் ஆட்டமேஷன், அஸ்ட்ரால், இந்துஸ்தான் மீடியா, ஆசியன் எனர்ஜி, யுனிகெம் ஆகிய நிறுவனப்பங்குகள் சரிந்தன. 

உக்ரைன்-ரஷ்யா பதற்றத்தால் ஐரோப்பியச் சந்தையிலும் ஊசலாட்டம் இன்று காணப்பட்டது. உணவு மற்றும் பானங்கள் தொடர்பான பங்குகள் மட்டும் ஓரளவு லாமடைந்தன. ஜப்பான் சந்தையான நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவில் முடிந்தன