நடப்பு வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே அங்கு கொரோனா லாக்டவுன் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் உள்ளது. மேலும் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்ததும், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்க முக்கியமானதாக கருதப்படுகிறது. 

தற்போதைய நிலவரப்படி  மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் ஆயிரத்து 312 புள்ளிகள் வரை குறைந்து, 49 ஆயிரத்து 734 ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 360 புள்ளிகள் வரை சரிந்து 14 ஆயிரத்து 736 ஆக வர்த்தகமாகிறது. 

இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் அதிக சரிவை சந்தித்துள்ளன. ஆசிய பங்கு சந்தைகளில் காணப்படும் சரிவே, இந்திய பங்கு சந்தைகள் சரிய காரணம் என்றும் கூறப்படுகிறது.