sendu mallipo sales rate is high
செண்டு மல்லி பூ விலை உயர்வு....
யுகாதி பண்டிகையையொட்டி பூ விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி ஓசூர் பகுதியில் செண்டு மல்லி பூ விலை அதிகரித்துள்ளது.ஒரு கிலோ ₹50 வரை விற்பனையாகிறது.
பொதுவாகவே கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில், செண்டு மல்லிப்பூ அதிக அளவில் கிடைக்கப்பெரும்.பல ஏக்கர்களில் பூ சாகுபடி செய்து வருவதால், விளைச்சலும் அதிகமாக இருக்கும்.
தற்போது யுகாதி பண்டிகை நெருங்குவதால், கிலோ ரூபாய் 2௦ க்கு விற்ற செண்டு மல்லிப்பூ , தற்போது 5௦ ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரு ஏக்கரில் செண்டு மல்லி பயிரிட ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் இதுபோன்ற விழாக்காலங்களில் செண்டு மல்லிப்பூவிற்கு அதிக மவுசு காணப் படுவதால் விற்பனை மற்றும் விலை அதிகரிக்கும் போது, 2 லட்சம் வரை லாபம் காண முடிகிறது என விவசாயிகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர் .
மேலும் , இங்கு விளையக்கூடிய மல்லிப்பூக்களை, மதுரை கோவை , திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
