டிராக்டர் படத்துடன் 786 சீரியல் நம்பர் கொண்ட ₹5 நோட்டுக்கு ₹6 லட்சம் வரை கிடைக்கும். ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யலாம். ஆனால், மோசடிகளைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பழங்கால பொருட்களுக்கும் நாணயங்களுக்கும் எப்போதுமே சந்தையில் மவுசு அதிகம்தான். பழைய செல்லா காசுகளை இன்றும் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிச்செல்வோரும் உண்டு. செலவு செய்ய முடியாமல் பீரோ மற்றும் பெட்டிகளில் தேங்கி கிடக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளையும் பழைய நாணயங்களையும் பணத்தை கொட்டிக்கொடுத்து வங்கி செல்ல பலரும் தயாராகவே உள்ளனர். அதன்படி விவசாயி படத்துடன் இருக்கும் 5 ரூபாய் நோட்டும் இப்போது மிக உயர்ந்த மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நோட்டு ₹6 லட்சம் வரை விற்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே ஆன்லைன் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால் நீங்கள் விற்பனை செய்யும் தளங்கள் அதிகாரப்பூர்வமானதா? என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த ₹5 நோட்டின் சிறப்பம்சம் என்ன?
இந்த ₹5 நோட்டில் டிராக்டர் படம் இருக்க வேண்டும். டிராக்டரில் விவசாயி அமர்ந்திருக்கும் படம் கூட இருக்க வேண்டும். மேலும் முக்கியமாக, நோட்டின் முன்னங்கையில் "786" என்ற சீரியல் எண் இருக்க வேண்டும். "786" என்ற எண் இஸ்லாமியர்களிடையே மிகவும் புனிதமான எணாக கருதப்படுகிறது. அதனால் இந்த எண்ணைக் கொண்ட நோட்டுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சீரியல் நம்பர் 786 என்பது அதிர்ஷ்டம் மற்றும் புனிதத்தை குறிக்கிறது. இந்த ஒரு நம்பருக்காகவே அதிகம் செலவு செய்யும் நபர்களும் உள்ளனர். எனவே உங்களிடம் இதுபோன்ற ஒரு நோட்டு இருந்தால் அதை ரூ.6 லட்சம் வரையில் விற்பனை செய்யலாம்.
எவ்வளவு கிடைக்கும்?
ஒரு 5 ரூபாய் நோட்டுக்கு ₹6 லட்சம் வரை பெறலாம். உங்கள் கையில்இருக்கும் மூன்று நோட்டுகள் இப்படி இருக்குமானால் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவோர் உடனே அதனை விற்பனை லட்சாதிபதி ஆகலாம்.
இணையத்தில் எங்கே விற்கலாம்?
இந்த ₹5 நோட்டை ஆன்லைனில் எளிமையாக விற்பனை செய்யலாம். Quikr (www.quikr.com) என்ற தளத்தில் Seller (விற்பனையாளர்) ஆக பதிவு செய்யுங்கள்.
பிறகு, உங்கள் ₹5 நோட்டின் தெளிவான புகைப்படம் ஒன்றை அங்கு பதிவேற்றுங்கள்.உங்கள் விளம்பரம் பார்த்து, வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வார்கள்.
நீங்கள் கூறும் விலையில் அதை விற்பனை செய்ய முடியும். ஆனால் ரிசர்வ் வங்கி இது போன்ற விற்பனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இதன் விளைவாக, ஏதேனும் மோசடி சம்பவங்கள் நடந்தால், அது முழுமையாக விற்பனையாளரின் பொறுப்பாகும்.
முக்கிய எச்சரிக்கை:
இந்த வகை நோட்டுகளுக்கு விலை கிடைக்கும் என்று இணையத்தில் பரப்பப்படும் தகவல்கள் பெரும்பாலும் தரவுகளற்றவை ஆக இருக்கக்கூடும். விற்பனைக்கு முன் உறுதி செய்யவும். ஈமெயில், OTP, Pay First போன்ற ஏமாற்று முறைகளை தவிர்க்கவும். வணிக தளங்களை சரிபார்த்து, பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் 5 ரூாய் நோட்டில் மேலே கூறிய சிறப்பம்சங்கள் இருந்தால், அதற்கு அதிக விலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விற்பனை செய்யும் முன் நம்பகமான தளங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் விதிமுறைகளை தெளிவாக அறிந்து செயல்படவும்.
